Ad

புதன், 6 டிசம்பர், 2023

`இங்கு எல்லோருக்கும் பணம் மட்டும்தான் முக்கியம்’ - இளம் பெண் மருத்துவர் தற்கொலை; வரதட்சணை காரணமா?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஷகானா. திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜில் சர்ஜரி பிரிவில் முதுகலை மருத்துவம் படித்துவந்தார். இளம் மருத்துவரான ஷகானா நன்றாக படிப்பவர் என்பதால் அவருக்கு மெரிட்டில் சீட் கிடைத்திருக்கிறது. திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜிக்கு அருகில் உள்ள ஒரு பிளாட்டில் உள்ள அறையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் (5.12.2023) இரவுப்பணி ஒதுக்கப்பட்ட நிலையில் டாக்டர் ஷகானா செல்லவில்லை. இதையடுத்து சக ஊழியர்களும், நண்பர்களும் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். இந்த நிலையில் மருத்துவ மாணவி ஷகானா தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ்

இதுகுறித்து தகவலின்பேரில் போலீஸார் அங்குசென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது அறையில் ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், "அப்பாதான் எனக்கு எல்லாமாக இருந்தார். அப்பா இறந்துவிட்டார். சகோதரியின் திருமணம் முடிந்துவிட்டது. ஒரு சகோதரன் இருக்கிறான். தொடர் படிப்பு, திருமணம் ஆகியவற்றுக்கு பணம் வேண்டும். யாரையும் நம்பியிருக்க என்னால் முடியாது. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் முக்கியம். எல்லாவற்றையும்விட பெரியது பணம்தான். என் வாழ்க்கை திக்கு தெரியாமல் நிற்கிறது" என அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் யாருடைய பெயரும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என மெடிக்கல் காலேஜ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே ஷகானா-வுக்கு அவருடன் முதுகலை மருத்துவம் படிக்கும் சீனியர் மருத்துவர் ரூவைசி-க்கும் திருமணம் பேசி வைக்கப்படிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே திருமணத்துக்கு வரதட்சணை அதிகமாக கேட்டதாகவும். அவர்கள் கேட்ட அளவு வரதட்சணை கொடுக்க முடியாத நிலை ஷகானா-வின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டதால் திருமணம் தடைபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த ஷகானா தற்கொலை செய்துகொண்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். கொல்லத்தைச் சேர்ந்த ரூவைசி முதுகலை மருத்துவர் சங்க மாநில தலைவராக முன்பு பொறுப்பு வகித்து உள்ளார். தற்போதும் அந்த சங்கத்தில் செயல்பட்டு வருகிறார். ஷகானா தற்கொலையை தொடர்ந்து அந்த சங்கத்தில் இருந்து மருத்துவர் ரூவைசி வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் ஷகானா

திருமணத்துக்கு சுமார் 50 சவரன் நகைகளும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், கார் உள்ளிட்டவைகள் வரதட்சணையாக வேண்டும் என கேட்டதாகவும். அதனால் ஷகானா மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஷகானாவின் தந்தை சில மாதங்களுக்கு மரணமடைந்ததை தொடர்ந்து குடும்பத்தில் வருவாய் சீர்குலைந்ததாகவும் கூறப்படுகிறது. இளம் மருத்துவர் ஷகானா மயக்க ஊசியை ஓவர் டோசாக உடலில் செலுத்தி தற்கொலை செய்துள்ளதாக பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநில சிறுபான்மை நல ஆணையமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. மாநில மருத்துவக்கல்வி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களிடம் அறிக்கை கேட்டுள்ளதுடன், வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிறுபான்மை நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/crime/young-doctor-suicide-letter-found-police-investigating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக