Ad

வெள்ளி, 22 டிசம்பர், 2023

``ஐ.டி பங்குகளுக்கு கெட்ட காலம் இன்னும் முடியவில்லை..." - எச்சரிக்கும் சர்வதேச நிறுவனம்!

கடந்த ஒரே வாரத்தில் ஐ.டி பங்குகள் அனைத்தும் அட்டகாசமான ஏற்றத்தை அடைந்துள்ளன. குறிப்பாக, லார்ஜ்கேப் ஐ.டி பங்குகள் அதிரடியாக உயரத் தொடங்கியிருக்கின்றன. கடந்த வாரத்தில் மட்டும் நிஃப்டி ஐ.டி குறியீடு 7.16 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

கடந்த சுமார் ஓர் ஆண்டுக் காலமாக அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வந்ததால் இந்திய ஐ.டி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஐ.டி பங்குகளும் சரிவடைந்தன. குறிப்பாக லார்ஜ்கேப் ஐ.டி பங்குகளே அடிவாங்கின.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி சூசகமாகத் தெரிவித்திருக்கிறது. இதனால் இந்திய ஐ.டி நிறுவனங்களே பெரிதும் பயனடையும் என்ற நம்பிக்கையில், கடந்த ஒரே வாரத்தில் ஐ.டி பங்குகளில் முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டியுள்ளனர். இதனால் ஐ.டி பங்குகளும் கடகடவென ஏற்றம் கண்டுள்ளன.

Citi

ஐ.டி பங்கு முதலீட்டாளர்கள் ஒரு பக்கம் குஷியில் இருந்தாலும் கூட, ஐ.டி நிறுவனங்களுக்கு குறுகிய காலத்தில் இன்னும் பிரச்னைகள் இருப்பதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில், முன்னணி ஐ.டி பங்குகளுக்கு சர்வதேச நிதி நிறுவனமான சிட்டி இன்னும் நெகட்டிவ் ரேட்டிங் கொடுத்திருக்கிறது.

ஐ.டி நிறுவனங்கள் தற்போது மிகவும் மந்தமான காலாண்டை எதிர்கொண்டு வருகின்றன. மேலும், ஐ.டி நிறுவனங்கள் கைப்பற்றிய பெரிய டீல்களும் மிகக் குறைவாகவே இருக்கின்றன. எனவே, ஐ.டி பங்குகளை விற்கும்படி சிட்டி நிறுவனம் பரிந்துரைக்கிறது.

உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனப் பங்குக்கு டார்கெட் விலையாக 3,170 ரூபாய் நிர்ணயித்துள்ளது சிட்டி நிறுவனம். ஆனால், தற்போது டி.சி.எஸ் பங்கின் சந்தை மதிப்பு சுமார் 3900 ரூபாய் அளவில் உள்ளது.

ஐ.டி பங்குகள் - IT Stocks

டி.சி.எஸ் நிறுவனம் கடந்த மூன்று காலாண்டுகளில் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான டீல்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது செலவுகளை மறுபரிசீலனை செய்து வருவதால், டி.சி.எஸ் நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போகலாம் என சிட்டி நிறுவனம் கூறுகிறது. இதனால், டி.சி.எஸ் பங்குகளை விற்கும்படி பரிந்துரைக்கிறது.

அடுத்ததாக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாடிக்கை நிறுவனங்களும் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றன. டெலிகாம், ஹை-டெக், ரீடெய்ல், ஃபைனான்ஷியல் சர்வீசஸ், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங், கார்ட்ஸ் ஆகிய துறைகளில் இன்ஃபோசிஸ் நிறுவனம் சவால்களை சந்தித்து வருவதாக சிட்டி கூறுகிறது. எனவே, இன்ஃபோசிஸ் பங்குக்கு 1565 ரூபாய் டார்கெட் விலை நிர்ணயித்துள்ளது. தற்போது இன்ஃபோசிஸ் பங்கு விலை சுமார் 1580 ரூபாயாக உள்ளது.

Sell

இதேபோல விப்ரோ, ஹெச்.சி.எல் டெக், எல்.டி.ஐ மைண்ட்ரீ, டெக் மஹிந்திரா போன்ற மற்ற முன்னணி ஐ.டி நிறுவனங்களும் டிமாண்ட் சவால்களை சந்தித்து வருகின்றன. எனவே, இந்த பங்குகளுக்கான டார்கெட் விலையையும் சிட்டி நிறுவனம் குறைத்திருக்கிறது.

விப்ரோ பங்குக்கான டார்கெட் விலை 360 ரூபாய்; தற்போதைய சந்தை விலை 450 ரூபாய்.

ஹெச்.சி.எல் பங்குக்கான டார்கெட் விலை 1,295 ரூபாய்; தற்போதைய சந்தை விலை 1500 ரூபாய்.

டெக் மஹிந்திரா பங்குக்கான டார்கெட் விலை 1000 ரூபாய்; தற்போதைய சந்தை விலை 1300 ரூபாய்.

எல்.டி.ஐ மைண்ட்ரீ பங்குக்கான டார்கெட் விலை 4,660 ரூபாய்; தற்போதைய சந்தை விலை 6,180 ரூபாய்.

ஐ.டி நிறுவனங்கள் குறுகிய கால அடிப்படையில் சந்திக்கும் சவால்களின் அடிப்படையில் சிட்டி நிறுவனம் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

General Disclaimer and Terms & Conditions of the research report

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://ift.tt/FYwRX2P. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://ift.tt/z3TBxIa (Choose the respective symbol) /name of company/time duration)

முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.



source https://www.vikatan.com/personal-finance/share-market/citi-retains-sell-calls-for-it-stocks-due-to-near-term-outlook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக