திமுக இளைஞரணி மாநாடு வருகிற 24-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு இடையே பேனர் வைப்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதையும் மீறி கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் சரத் மற்றும் விவசாய அணி துணை அமைப்பாளர் சுபகுமார், ஆகியோர் பிளக்ஸ் வைப்பது தொடர்பாக செல்போனில் காரசாரமாக பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.
சரத்துக்கு செல்போனில் அழைத்த சுபகுமார், “நான் வைச்ச பிளக்ஸை தூக்கிட்டு, உங்க ஆள்கள் வைச்சுருக்காங்க. நான் கம்பம் நட்டு .. பிளக்ஸ் அடிச்சு வைச்சுருக்கேன். என்கிட்ட ஒருவார்த்தை கேட்டு வைச்சுருக்கலாம்ல.” என்று சொன்னார். அதற்கு சரத், “பகுதி செயலாளர் நான் சொல்லி வைச்சுருக்காங்க. அதுல என்ன தப்பு.” என்று பதிலளித்தார். “பகுதி செயலாளர் என்றால் என்ன வேண்டுமானால் செய்வீர்களா?” என சுபகுமார் கேட்க, பதிலுக்கு சரத், “இங்க கட்சியே நான் தான். நான் யார்கிட்ட போய் கேட்கணும்.
நான் பிளக்ஸ் வைக்கக் கூடாதுனு சொல்ல நீங்க யாரு. கட்சிக்கு பகுதி செயலாளர் நான். இங்க நான் சொல்றதுதான். கோஷ்டி உருவாக்குனாலும் தடுப்பேன்.” என்றார். சுபகுமார் விடப்படியாக, “இங்க நான் பிளக்ஸ் வைச்சுக்கறேன். நீங்க வேற இடத்துல வைங்க. கட்சிக்காக தான நானும் வைக்கறேன். கண்டிப்பா நான் வைப்பேன்.” என்று கூறினார். தொடர்ந்து சரத்தும் “அப்படி எல்லாம் விட முடியாது. நாங்க தான் அங்க வைப்போம். நீங்க எங்காயச்சு போய் வைச்சுக்கோங்க.” என்று உறுதியாக கூறிவிட்டார்.
இதுதொடர்பாக சுபகுமாரிடம் விளக்கம் கேட்டபோது, “இளைஞரணி மாநாட்டுக்காக பிளக்ஸ் அடித்து ஓரமாக தான் வைத்திருந்தேன். அவரது ஆள்கள் அதை கழட்டி உடைத்து சாக்கடையில் வீசிவிட்டனர். அதை கேட்டதற்கு மோசமாக பேசி, ரெளடிகளை அழைத்துவந்து பிரச்னை செய்தார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பிளக்ஸ் வைத்துவிட்டார்.
மேலும் நள்ளிரவு செல்போனில் அழைத்து, ‘வீட்டை திறந்து வை. உன்னை கொன்னுடுவேன்.’ என மிரட்டுகிறார். இதுதொடர்பாக மாவட்ட செயலாளரிடம் புகாரளித்துள்ளேன். அவரின் தந்தை என்னை வெட்டிவிடுவேன் என்று கூறுகிறார். நான் பாரம்பர்ய திமுககாரன். இவர்களின் ரெளடிதனத்தால் கட்சிக்கு பலர் வருவதே இல்லை.” என்றார்.
இதுகுறித்து சரத்திடம் விளக்கம் கேட்டபோது, “3 மாதங்களுக்கு முன்பே பிளக்ஸ் வைத்துள்ளனர். பிளக்ஸ் வைப்பதில் பிரச்னை இருப்பதால், எங்கள் பகுதிக்குள் கட்சியினர் யாரும் பிளக்ஸ் வைக்கக் கூடாது என சொல்லியுள்ளோம். அவர் வைத்த பேனரில் மாமன்ற உறுப்பினர், வட்ட செயலாளர் ஆகியோரின் படங்களை வைக்கவில்லை.
அது கோஷ்டி அரசியலை உருவாக்கும் என்பதால் அப்படி வைக்க வேண்டாம் என்று கூறினேன். அவர் மீண்டும் அந்தப் படங்களுடன் பிளக்ஸ் வைத்தார். அதை நான் விட்டுவிட்டேன். இதுதொடர்பாக மாவட்ட செயலாளரிடமும் விளக்கம் கொடுத்துள்ளேன். மற்றபடி அவர் சொல்வதுபோல எல்லாம் எதுவும் இல்லை.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
source https://www.vikatan.com/government-and-politics/viral-audio-of-coimbatore-dmk-cadres-in-banner-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக