Ad

புதன், 22 ஜூலை, 2020

கோவை: `பெட் இல்லை!' - கொரோனா பாசிட்டிவ் பெண் ஒரு நாள் முழுவதும் அலைக்கழிப்பு

கோவை முழுவதும் கொரோனா பாதிப்பு பரவலாகி வருகிறது. நேற்று மட்டும் கோவையில் 177 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 நாள்களில் 883 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,500-ஐ நெருங்கிவிட்டது. 1,314 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

கொடிசியா

Also Read: கோவை: பரிசோதனை முடிவு; மறைக்கப்படும் தகவல்கள்! - பதற்றத்தில் போலீஸ், பொதுமக்கள்

அதை உறுதிப்படுத்தும் வகையில், கோவையில் கொரோனா உறுதியான ஒரு பெண்ணை, படுக்கை இல்லை என ஒரு நாள் முழுவதும் மருத்துவமனைகளுக்கு அலைக்கழித்த சம்பவம் நடந்துள்ளது.

கோவை, செட்டிவீதி சாமியார் புது வீதியைச் சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ``கடந்த சனிக்கிழமை எங்களது பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தினர். நானும் என் மனைவியும் பரிசோதனை செய்தோம். அதில், என் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவாகியிருப்பதாக அழைப்பு வந்தது. `சிறிது நேரத்தில் வண்டி அனுப்புகிறோம். கொடிசியாவில் அட்மிட்டாகிவிடுங்கள்’ என்றனர். நாங்கள் வீட்டில் ஆலோசித்துவிட்டு, `எங்களிடம் வண்டி இருக்கிறது, நாங்களே வந்துவிடுகிறோம்’ எனக் கூறினோம்.

கொரோனா பாதிக்கப்பட்ட பெண்

அவர்களும் ஒரு நம்பரைக் கொடுத்து வரச் சொன்னார்கள். ஆனால், அங்கு சென்றவுடன்,`இங்கு பெட் இல்லை. நீங்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனை செல்லுங்கள். ஒரு நாள் அங்கு வைத்துவிட்டு, இங்கு யாராவது டிஸ்சார்ஜ் ஆனபிறகு இங்கு அனுப்பிவிடுவார்கள்’ என்று கூறினர்.

Also Read: மருத்துவமனையிலிருந்து எஸ்கேப்; குடும்பத்துடன் சண்டை! கோவை கோயில்களை சேதப்படுத்திய கஜேந்திரன்

அதனால், நாங்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு அவர்கள், `நீங்கள் ரத்த பரிசோதனை செய்துவிட்டு போங்கள். அப்போதுதான் அட்மிட் செய்வார்கள்’ என, ரத்த பரிசோதனை செய்துவிட்டு, ஒரு பேப்பரில் கோவிட் கொடிசியா என எழுதி கொடுத்தனர். `அவர்கள் அங்கு பெட்டே இல்லை’ என சொல்கின்றனரே என நாங்கள் கேட்டோம். அதற்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையில், `இதை கொண்டுசென்று காட்டுங்கள் அட்மிட் செய்து விடுவார்கள்’ என்று கூறினார்கள். மீண்டும் கொடிசியா சென்றோம். கொடிசியாவில், `இங்கு அட்மிட் செய்ய முடியாது.

தம்பதி

இ.எஸ்.ஐ-க்கு செல்லுங்கள்’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். வேறு வழியில்லாமல் மீண்டும் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்று கேட்டோம். அங்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மணிக்கணக்கில் எங்களைக் காத்திருக்க வைத்தனர்.

கடைசியாக, ஒரு சீட்டில், `நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்’ என அவர்களாகவே எழுதி என் மனைவியிடம் கையெழுத்தி வாங்கி அனுப்பி வைத்துவிட்டனர். இரண்டு ஸ்லிப்பை மட்டும் கொடுத்துவிட்டு, ஒரு நாள் முழுவதும் அலைக் கழித்துள்ளனர். இந்த மன உளைச்சலாலேயே எனக்கும் கொரோனா வந்துவிடும் என்று தோன்றுகிறது.

ஸ்லிப்

இதே வயதானவர்களாக இருந்தால், இந்நேரம் என்ன ஆகியிருக்கும்? எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது என்ன செய்வதென்றே புரியாமல் இருக்கிறோம்” என்றார்.

Also Read: கோவை: பரிசோதனை முடிவு; மறைக்கப்படும் தகவல்கள்! - பதற்றத்தில் போலீஸ், பொதுமக்கள்

கோவையில் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் கொரோனா பணிகளை நேற்றுதான் ஆய்வு செய்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர்,``கோவையில் 4,685 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கூடுதலாகப் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன” என்றார். ஆனால், அமைச்சர் சொன்ன அதேநாளில் ஒரு நோயாளி படுக்கை வசதி இல்லாமல் அலைக்கழிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர்

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரி ராஜா, ``கொரோனா தாக்கத்தைப் பொறுத்துத்தான், அவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து வருகிறோம். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தாக்கம் சற்று அதிகம் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை கொடுத்து வருகிறோம். எந்த அறிகுறியும் இல்லாதவர்களுக்கு கொடிசியாவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு அறிகுறி இல்லாததால், அவரை கொடிசியாவில் அனுமதித்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/health-officials-did-not-admit-me-in-hospitals-alleges-coimbatore-corona-positive-woman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக