இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் ஆடைகள் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்காக பா.ஜ.க சார்பாக மும்பை போலீஸிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் தனது ஆடை விவகாரத்தில் உர்ஃபி ஜாவேத் சமரசம் செய்து கொள்ள மறுக்கிறார். புதிதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் சிறை வாழ்க்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள படத்தில் உர்ஃபி நடித்துள்ளார். இதற்காக அடிக்கடி விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஆபாச உடையணிந்ததற்காக உர்ஃபி ஜாவேத்தை போலீஸார் கைது செய்து அழைத்து செல்வது போன்ற ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. போலீஸ் உடையில் வந்த இரண்டு பேர் உர்ஃபியிடம் ஆபாச உடை அணிந்திருப்பதாக கூறினர். அதற்கு உர்ஃபி தான் ஆபாச ஆடை அணியவில்லை என்று தெரிவித்தார். ஆனாலும் அந்த இரண்டு பெண் போலீஸார் உர்ஃபியை கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்வது போன்று வீடியோவில் காட்சி இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோ குறித்து போலீஸார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
விசாரணையில் உர்ஃபி ஜாவேத் விளம்பரத்திற்காக இது போன்ற ஒரு போலி கைது நாடகத்தை அரங்கேற்றி இருந்தார் என்று தெரிய வந்தது. இதையடுத்து உர்ஃபி ஜாவேத் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதோடு உர்ஃபி ஜாவேத்தை போலீஸ் உடையணிந்து கைது செய்த இரண்டு பெண்களும் கைது செய்யபட்டு இருப்பதாக போலீஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் மலிவான விளம்பரத்திற்காக சட்டத்தை மீற முடியாது.
வைரல் வீடியோவில் இடம் பெற்றுள்ள பெண் போலீஸார் சீருடையை தவறாக பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தவறான விளம்பரத்திற்கு வழிவகுத்தவர் மீது ஓசிவாரா போலீஸ் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி இன்ஸ்பெக்டரும், கைது செய்ய பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
source https://www.vikatan.com/trending/actress-urfi-javed-who-staged-a-fake-arrest-for-cheap-publicity
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக