நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகளை உடுத்தியும், இனிப்பு, பலகாரங்களைப் பகிர்ந்து சாப்பிட்டும் கொண்டாடி வருகிறார்கள். அதே நேரம் மோடி பிரதமராகப் பதவி ஏற்றத்திலிருந்தே தீபாவளி பண்டிகையை எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நம் நாட்டு ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
2014-ம் ஆண்டு சியாச்சின், 2015-ம் ஆண்டு பஞ்சாபின் அமிர்தசரஸ், 2016-ம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தில் சீன எல்லையிலும், 2017-ம் காஷ்மீரின் குரேஸ் செக்டாரில், 2018-ம் ஆண்டு சாமோலி, 2019-ம் ஆண்டு ரஜோரி, 2020-ம் ஆண்டு ஜெய்சால்மர், 2021-ம் ஆண்டு நௌஷேரா, 2022-ம் ஆண்டு கார்கில் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களைச் சந்தித்து தீபாவளியைக் கொண்டாடினார். அந்த வகையில் இந்த 2023-ம் ஆண்டு இமாச்சல பிரதேச மாநிலம் லிப்சா பகுதியில் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
அந்த வகையில், இந்த ஆண்டு இமாச்சலப்பிரதேசத்தின் லெப்சா கிராமத்துக்குச் சென்ற பிரதமர் அங்குச் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்தோ - திபெத் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "இமாச்சலப்பிரதேசத்தின் லெப்சா எல்லைப் பகுதியில் உள்ள நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது மிகவும் உணர்வுப்பூர்வமானது. பெருமிதமானது. வீரர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து தொலைவில் இருக்கிறார்கள்.
அவர்களது அர்ப்பணிப்பு காரணமாகவே நாட்டு மக்களின் வாழ்க்கை பிரகாசமாகிறது. நமது ராணுவ வீரர்களின் துணிச்சல் அசாத்தியமானது. மிகக் கடினமான சூழலில், குடும்பத்தினரை விட்டு விலகி, மிகப் பெரிய தியாகங்களை அவர்கள் செய்து வருகிறார்கள். அதன் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்கிறார்கள். இத்தகைய கதாநாயகர்களுக்கு நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 500-க்கும் மேற்பட்ட பெண் ராணுவ அலுவலர்களின் பணி நிரந்தரப்படுத்தப்பட்டிருக்கிறது.
ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்களை இயக்குபவர்களாகவும் பெண் ராணுவ அதிகாரிகள் உருவாகியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நான் நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன். நாடு முழுவதும் உள்ள வீடுகளில் ஒவ்வொரு பூஜையின் போதும், நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களுக்காகப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும், வீரர்களுக்காக ஒரு தீபம் ஏற்றப்படுகிறது. படையினர் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நிலைகள் கோவில்களை விடக் குறைவானதில்லை. ராமர் இருக்கும் இடம்தான் அயோத்தி எனச் சொல்லப்படுவது உண்டு.
ஆனால், என்னைப் பொறுத்தவரைப் பண்டிகை என்பது நமது வீரர்கள் இருக்கும் இடம்தான். கடந்த 30 - 35 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் இல்லாமல் நான் தீபாவளியைக் கொண்டாடியது கிடையாது. பிரதமராக இருக்கும்போதும், முதல்வராக இருக்கும்போதும் ஏதேனும் ஒரு எல்லைக்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
source https://www.vikatan.com/news/general-news/pm-modi-said-the-courage-of-our-forces-in-unwavering
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக