டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்.பி சஞ்சய் சிங் ஆகியோரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை கைதுசெய்து, சிறையிலடைத்திருக்கும் நிலையில், மூன்றாவது நபராக முதல்வர் கெஜ்ரிவாலை விசாரிக்க முயன்று வருகிறது. இது தொடர்பாக நவம்பர் 2-ல் நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு சம்மனும் அனுப்பியது அமலாக்கத்துறை.
ஆனால், `இது பா.ஜ.க-வின் உத்தரவின் பேரில் நடக்கிறது' எனக் கூறி ஆஜராவதைப் புறக்கணித்தார் கெஜ்ரிவால். இருப்பினும், ஆம் ஆத்மி அமைச்சர்கள் தொடர்ச்சியாக, கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி தலைவர்கள் அனைவரையும் அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க கைதுசெய்ய நினைப்பதாகவும், அப்படி நடந்தால் சிறையிலேயே அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்வோம் எனவும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்குப் பெரிய அளவில் ஏதோவொன்று நடக்கப்போவதாகச் சிறையிலிருக்கும் எம்.பி சஞ்சய் சிங் எச்சரித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோவை ஆம் ஆத்மி தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.
कोर्ट में पेशी के बाद AAP MP संजय सिंह का बड़ा खुलासा-
— AAP (@AamAadmiParty) November 10, 2023
"केजरीवाल जी को फंसाने की बहुत बड़ी साजिश है
सिर्फ गिरफ्तारी नहीं, केजरीवाल के साथ बड़ी घटना को अंजाम देने वाले हैं ये लोग" pic.twitter.com/6NBErnUHyi
அந்த வீடியோவில், சஞ்சய் சிங்கை போலீஸார் குழுவாக அழைத்துச் செல்கின்றனர். அப்போது, ``கெஜ்ரிவாலை சிக்க வைக்க ஒரு பெரிய சதி இருக்கிறது. கெஜ்ரிவால் கைதுசெய்யப்படுவதைத் தாண்டி, இவர்களால் (பா.ஜ.க) அவருக்கு ஏதோவொரு பெரிய விஷயம் நடக்கப் போகிறது" என்று எச்சரித்தார்.
source https://www.vikatan.com/news/general-news/something-big-is-going-to-happen-to-kejriwal-jailed-aap-leader-warns
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக