Ad

புதன், 8 நவம்பர், 2023

ராஜபாளையத்தில் மான் வேட்டை; 15 கிலோ இறைச்சி பறிமுதல்! - ஒருவர் கைது, 4 பேருக்கு வலை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மான் இறைச்சி விற்ற நபரை வனத்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசுகையில், "ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மாமிசத்திற்காக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் ராஜபாளையம் வனத்துறை அதிகாரிகள், மலையடிவார பகுதிகளில் ரோந்து சென்றனர்.

மான் இறைச்சி

அப்போது, அப்பகுதியில் வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்தன. இதை அடிப்படையாகக்கொண்டு சுந்தரராஜபுரம் பகுதியில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் வீட்டில் வனவிலங்குகளின் இறைச்சி விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, முத்துக்குமாரை பிடித்து விசாரிக்கையில், "முத்துக்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று புள்ளிமான், சருகுமான் மற்றும் மரநாய் உள்ளிட்ட வன விலங்குகளை மாமிசத்துக்காக வேட்டையாடி பகலில் விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, முத்துக்குமார் மற்றும் அவரின் கூட்டாளிகள் 4பேர் என மொத்தம் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் முத்துக்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 கிலோ மான் இறைச்சி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பியோடி தலைமறைவான முத்துக்குமாரின் கூட்டாளிகள் 4 பேரை வனத்துறை தேடி வருகிறது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/news/general-news/rajapalayam-deer-hunter-arrested-and-15-kg-meat-were-seized-by-the-forest-department

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக