கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் கட்சி அறிவித்ததில் மிகவும் முக்கியமானதாக இருப்பது `குருஹ லட்சுமி திட்டம்.’ இந்தத் திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகையாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த மிகப் பெரிய அளவில் நிதி தேவைப்படும். எனவே, இதைத் தாமதமாகத்தான் செயல்படுத்துவார்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், குருஹ லட்சுமி திட்டத்தை ஆகஸ்ட் மாதம் செயல்படுத்தத் தொடங்கியது கர்நாடக அரசு.
இந்தத் திட்டத்துக்காக மட்டும் மாதம் 2,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது அம்மாநில அரசு. இதன்மூலம் 1.2 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனும் பயனாளராகச் சேர்க்கப்பட்டு மாதம்தோறும் ரூ.2,000 பெறுவதாகத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
முன்னதாக கர்நாட மாநில மேலவை உறுப்பினரும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு துணைத் தலைவருமான தினேஷ் கூலிகவுடா, அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனையும் குருஹ லட்சுமி திட்டத்தில் சேர்க்க வேண்டும், அவருக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்ற துணை முதல்வர் சாமுண்டீஸ்வரி அம்மனையும் திட்டத்தில் சேர்த்துள்ளார்.
இப்போது சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் மாதம் ரூ.2,000 அனுப்பி வைக்கப்படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/goddess-chamundeshwari-to-get-rs-2k-monthly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக