முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதன் டிஜிட்டல் பாய்ச்சலின் அடுத்த முயற்சியாக 'Jio Meet' என்னும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவையை அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக வெவ்வேறு வடிவங்களில் கடந்த நான்கு மாதங்களாக பொது முடக்கம் என்பது நீடித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள், தங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகப் பாடங்களைப் பயிற்றுவிக்கிறார்கள். இதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு Zoom, Google Meet போன்ற வீடியோ கான்ஃபரன்சிங் செயலிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் Zoom, Google Meet போன்ற சர்வதேச செயலிகளுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் இந்த 'Jio Meet' வீடியோ கான்ஃபரன்சிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
முற்றிலும் இலவசமான இந்தச் செயலி மூலம் நாம் எல்லையில்லாமல் அதிகப்படியான வீடியோ மீட்டிங்குகளில் ஈடுபடலாம். 'ஜியோ மீட்' செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் விண்டோஸ் ஸ்டோரில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். செயலி இல்லாமல் கூகுள் குரோம் மற்றும் பயர்ஃபாக்ஸ் போன்ற வெப் பிரவுசர்கள் வழியாகவும் 'Jio Meet' சேவையைப் பயன்படுத்த முடியும்.
Also Read: `ஜியோ ஈர்த்த ரூ.1,17,588.45 கோடி முதலீடு; கடனில்லை!’ - மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி
ஜியோ மீட் இயங்கும் சாதனங்கள்:
• ஆண்ட்ராய்டு 5.0+ இல் இயங்கும் சாதனங்கள்
• ios 9+ இல் இயங்கும் சாதனங்கள்
• விண்டோஸ் 10 சாதனங்கள்
• Mac OS 10.13+ இல் இயங்கும் சாதனங்கள்
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்தச் செயலி நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாகியுள்ளது. காரணம் இதன் வடிவமைப்பு அப்படியே ஜூம் போன்றே இருப்பதுதான். இதைச் சுட்டிக்காட்டிய ட்விட்டர் பதிவைக் கீழே காணலாம்.
இதனால், `லோகோ கூட மாத்தலையே பாஸ்!' எனப் பலரும் இந்தச் செயலி குறித்து மீம்கள் பதிவிட்டுவருகின்றனர். ஜியோ தரப்பு இதுகுறித்து எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.
source https://www.vikatan.com/technology/tech-news/is-jio-meet-a-exact-copy-of-zoom-controversy-surrounds-new-app
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக