Ad

புதன், 22 ஜூலை, 2020

கடிதங்கள்

உயிர் தந்த தாயை அடுத்து என்றும் அடைக்கலம் கொடுக்கும் இன்னொரு தாய் நம் சென்னை என்பதை உணர்த்தியது சென்னை குறித்த கட்டுரை.

- அமர்

ஆன்லைன் கல்வி தினமும் காலை 8.30 முதல் மதியம் 12.30 வரைதான். இதற்கு எதற்கு முழுக் கட்டணம்? இது அதர்மம்.

- நாதமுனி

விகாஷ் துபேயின் என்கவுன்டரில் போலீஸ் தரப்புக் கூற்றுகள், ஓட்டைகளால் நிறைந்துள்ளன. 56 வயதுடைய ஒருவர், இளவயதுடைய போலீஸாரை விடவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, அவர்களின் துப்பாக்கியைப் பிடுங்கி... சுட்டு... தப்பித்து ஓட முற்பட்டார் என்றால் உ.பி போலீஸாரின் உடல்தகுதி குறித்தல்லவா கேள்வி எழுகிறது!

- அஜித்லால்

தமிழ்நாடு அரசின் பார்வைக்கும், செயல்பாட்டுக்கும் வர வேண்டிய அருமையான விகடனின் தலையங்கம். தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தைத் தமிழ்நாடு அரசு ஆதரிக்காவிட்டால் வேறுயார் ஆதரிப்பார்கள்?

வேலன்

அரசியல்வாதிகள் கேள்வி பதில் அருமை. அட்டகாசமான கான்செப்ட்

- ஹரி

மாபெரும் சபைதனில்... சிறப்பான தொடர்.சில வாரங்கள் ஆச்சர்யம், சில சமயம் நெகிழ்வு, என உங்களின் பயணத்தில் நாங்களும் கலந்து கொண்டோம். நன்றியும் வாழ்த்துகளும்.

- அனுசுயா

ரொம்ப நாளைக்குப் பொறவு. நம்ம வைகைப் புயலை இன்பாக்ஸில் பிரிட்டிஷ் இளவரசராகப் பார்த்தபோது குபுக்குனு சிரிப்பு வந்துடுச்சுப்பா!

- அ. யாழினி பர்வதம், சென்னை-78



source https://www.vikatan.com/literature/letters/letters-29th-july-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக