Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

பிளாட்டினம் சீசன் ஆஃப் ஹோப் விருது : நான்காவது முறையாக வென்றது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

பாரம்பரிய மற்றும் அதிநவீன நகைகளின் அணிவகுப்பின் காரணமாக, கடந்த 57 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற பெயர் - ஜிஆர்டி ஜூவல்லர்ஸ். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் மனங்களில் ஜிஆர்டி என்பது சுபத்தையும் மங்களத்தையும் நினைவூட்டும் பெயராகும். தங்களுடைய ஆபரணங்கள் வடிவமைப்பு மற்றும் சேவைப் பணிகளுக்காக, எப்போதும் விருதுகளைக் குவிக்கும். இந்த சீசனிலும் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளாட்டினம் சீசன் ஆஃப் ஹோப் விருது

நாடெங்கிலும் 2020 அக்டோபர் 16 முதல் நவம்பர் 20 வரை நடைபெற்ற பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல் அமைப்பால் நடத்தப்பட்ட பிளாட்டினம் சீசன் ஆஃப் ஹோப்-ல் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்-ன் கோட்ஸ் ரோடு ஷோரூம், தேசிய அளவில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தின் வெற்றியாளராக உஸ்மான் சாலை ஷோரூம் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேசிய அளவில் சிறந்த சேல்ஸ் மேனேஜர், முதல் இரண்டாம் நிலைக்கும் தென் மண்டல சிறந்த சேல்ஸ் மேனேஜர்-க்கும் ஜிஆர்டி ஷோரூம் மேலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவிலான, தென் மண்டல அளவிலான விருதுகளை ஜிஆர்டி தொடர்ச்சியாக நான்காவது முறையாக வென்றெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர் ‘அனந்த்’ அனந்தபத்மநாபன் விருதுகளைப் பற்றிப் பேசுகையில், “எங்களுடைய தயாரிப்பு வடிவமைப்புகள், சேவைப் பணிகள் ஆகியவை மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதிலும் ஷோரூமின் சூழல் வாடிக்கையாளர்களுக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருந்து செயல்பட்டு வருகிறோம் என்பதையே தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக பெற்றுவரும் விருதுகள் பறைசாற்றுகின்றன” என்று குறிப்பிட்டார்.

பிளாட்டினம் சீசன் ஆஃப் ஹோப் விருது

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் மேலும் கூறுகையில், “விருதுகள், எங்களுக்கும் எங்கள் குழுவினருக்கும் மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து வந்ததைவிட எங்கள் ஷோரூம்களில் இருக்கும் அனைத்து நகைகளையும் பார்த்து புன்னகையுடன் பெற்றுச் செல்கிறார்கள் என்பதே எங்களுக்கு மிகப் பெரிய பெருமிதத்தை அளிக்கிறது” என்றார்.



source https://www.vikatan.com/business/miscellaneous/grt-jewellers-win-awards-fourth-year-in-a-row

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக