திருச்சியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பாரில் மது குடித்துவிட்டு தங்களுக்குள் பாட்டிலால் தாக்கிக் கொண்ட சம்பவத்தில், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த திருச்சி காவல்துறை, அவர்களை சிறையில் அடைத்தது.
இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், ``நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், வாய் தகராறு ஏற்பட்டதால் பீர் பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read: ஆந்திரா: இழப்பீடு விவகாரத்தில் மெத்தனம்! - ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம்
இது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ``மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்குவதாக” கூறினார்.
இது குறித்து யோசித்து கூறுமாறு சொல்லி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மது குடித்ததால் ஏற்பட்ட வழக்கில் ஜாமீன் பெற வேண்டி தாக்கல் செய்த வழக்கில் நீதிபதியின் உத்தரவு கவனத்தை ஈர்த்திருக்கிறது.
source https://www.vikatan.com/news/judiciary/high-court-order-in-youngsters-fighting-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக