Ad

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்: அதிமுக முன்னாள் அவைத்தலைவராக இருந்தவர்

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்!

பிரபல கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான கவிஞர் புலமைப்பித்தன் கடந்த சில நாள்களாக உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 86. எம்.ஜி.ஆர் நடித்த பல்வேறு படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறார் புலமைப்பித்தன்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழ்நாட்டில் பள்ளிகளில் தற்போது 9 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் ரேண்டம் முறையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவதில் சிலருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஏற்படும் தொற்று பாதிப்புகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மகாராஷ்டிராவில் மூன்றாவது அலை குறித்த பேச்சுகள் தொடங்கி இருக்கும் சூழலில், தமிழகத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம்?!

தமிழக சட்டப்பேரவையில், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. வருகிற 13-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில், இன்று காலை பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அவை மீண்டும் கூடி, சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற இருக்கிறது.

தமிழகச் சட்டப்பேரவை

இதனிடையே, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-08-09-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக