Ad

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

`திருடச் சென்றபோது எழுந்துவிட்டார்!’ - 92 வயது மூதாட்டியை குழவிக்கல்லை போட்டுக் கொன்ற இளைஞர்

நாமக்கல் அருகே நகை பணத்துக்காக, நள்ளிரவில் தனது வீட்டில் தூங்கிகொண்டிருந்த 92 வயது மூதாட்டி மீது இளைஞர் ஒருவர் குழவிக்கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. அந்த மூதாட்டியின் வீட்டில் குடியிருந்த பெயின்டர் ஒருவரே, அந்த மூதாட்டியை கொலை செய்துள்ளது, போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைசெய்யப்பட்ட மாராயி

Also Read: நித்யானந்தா ஆசிரமம்: "இங்கிருந்து என்னை அழைத்துச் சென்றுவிடுங்கள்"-மகனிடம் கேட்ட தாய்;பின்னணி என்ன?

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இருக்கும் நேரு நகர் பகுதியில் வசித்து வந்தவர், மாராயி. 92 வயது மூத்தாட்டியான இவர், கணவரை இழந்த நிலையில், தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று காலை வெகுநேரமாகியும் மூதாட்டி வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், அந்த மூதாட்டியின் மற்றொரு வீட்டில் குடியிருந்த, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர், அவரின் பேரன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால், பதறிபோன கணேசன், சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார். தனது பாட்டி தங்கியிருக்கும் வீட்டின் கதவை பலமுறை தட்டினார். ஆனால், உள்ளே இருந்து எந்த தகவலும் வராததால், கணேசன் அதிர்ச்சியடைந்தார். இதனால், மாராயின் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூதாட்டியின் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மோகனூர் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கொலை

அந்த வகையில், காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில், கொலைசெய்யப்பட்ட மூதாட்டியின் வீட்டில் வசித்த காளிதாஸை விசாரித்தபோது, பாட்டி வைத்திருந்த நகை மற்றும் பணத்தைத் திருட சென்றபோது பாட்டி எழுந்து கொண்டதால், அருகில் இருந்த சிறிய குழவிக்கல்லால் அவரது தலையில் அடித்து கொலை செய்துவிட்டு, தனது வீட்டிற்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தன்மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காகதான், அவரின் பேரனுக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

Also Read: டெல்லி: 50 இடங்களில் கத்திக்குத்து; இளம்பெண் கொடூரக் கொலை! - கூட்டுப்பாலியல் வன்கொடுமையா?

'கொரோனா காலம் என்பதால், வேலை சரிவர கிடைக்கவில்லை. அதனால், வருமானம் இன்றி தவித்த நான், பணம், நகைக்காக பாட்டியைக் கொலைசெய்துவிட்டேன்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து, காளிதாஸை கைதுசெய்த மோகனூர் காவல் நிலைய போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். நகை, பணத்துக்காக, தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரையே இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காளிதாஸின் மனைவி, உயிரிழந்த மாராயி அவர்களின் பேரன் கணேசன் வைத்துள்ள கடையில் பணிபுரிந்து வருவது குறப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/crime/namakkal-youth-murdered-aged-women-for-money

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக