புதுச்சேரியில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாள்களாக படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் குருவிநத்தம் கிராமத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு சென்று வந்த சோரியாங்குப்பம் கிராம மக்களுக்கு கொரோனா அறிகுறிகளுடன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த இரு நாட்களாக மருத்துவமனைக்கு சென்ற அந்த கிராமத்து மக்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அந்த கிராமத்துக்கு சென்ற சுகாதாரத்துறையினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சோதனையில் நேற்றும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த இருபத்தி மூன்று பேரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Also Read: ஒரே பள்ளியைச் சேர்ந்த 229 மாணவர்களுக்குத் தொற்று! - கொரோனா அலர்ட்டில் மகாராஷ்டிரா
புதுச்சேரியில் தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்ததால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக ஒன்பது முதல் +2 வரையில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு கிருமாம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் மூன்று மாணவர்களுக்கும், ஒரு பேராசிரியருக்கும் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி மூடப்பட்டது. அதேபோல சில தினங்களுக்கு முன்பு கரையாம்புத்தூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்று பேருக்கும் கொரோனா அறிகுறிகளுடன் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு சோதனை நடத்தியதில் அவர்கள் மூவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, அதையடுத்து அந்த மாணவர்கள், அவர்களின் உறவினர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்கணித்து வருகிறது சுகாதாரத்துறை.
Also Read: கோவை: 9-ம் வகுப்பு மாணவர்கள் மூவருக்கு கொரோனா உறுதி! - 3 நாள்களுக்குப் பள்ளியை மூட உத்தரவு
source https://www.vikatan.com/government-and-politics/healthy/in-puducherry-village-corona-cluster-found-after-attending-an-family-event
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக