Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

Covid Questions: பீரியட்ஸின்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

பீரியட்ஸின்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- ரோஸலி கேத்தரின் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

``பீரியட்ஸ் நேரத்தில் தயங்காமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பீரியட்ஸ் நாள்களில் தடுப்பூசி போடுவதால் அது ரத்தப்போக்கு வெளியேறும் தன்மையையோ, மாதவிலக்கு சுழற்சியையோ எந்த விதத்திலும் பாதிப்பதாக இதுவரை எதுவும் நிரூபிக்கப் படவில்லை. பீரியட்ஸின்போது கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது, அப்படிப் போட்டுக்கொண்டால் அது ரத்தப்போக்கின் தன்மையை பாதிக்கும் என்றெல்லாம் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளில் பரப்பப்படும், பகிரப்படும் தகவல்களில் துளியும் உண்மை கிடையாது. அத்தனையும் தவறானவையே.

18 வயதுக்கு மேலான பெண்கள் எல்லோரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பீரியட்ஸின் எந்த நாளில் இருந்தாலும் பிரச்னையில்லை. ஹார்மோன் தொடர்பான வேறு பிரச்னைகள் இருந்தாலும்கூட தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தடுப்பூசி

Also Read: Covid Questions: பிசிஓடி (PCOD) பாதிப்புள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

இன்னும் சொல்லப் போனால் கொரோனாவின் மூன்றாவது அலை தாக்குவதற்கு முன்பே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவேளை மூன்றாவது அலை வந்தாலும் அது தீவிரமாகாமலிருக்க நமக்கிருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/health/healthy/can-women-take-covid-vaccines-during-their-periods

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக