``கடந்த மாதம் எனக்கு இரண்டாவது பிரசவம் நடந்தது; சிசேரியன். கூடவே குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையையும் செய்துகொண்டேன். இந்நிலையில் நான் எப்போது கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொள்ள வேண்டும்?"
- வித்யா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
``கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். சொல்லப்போனால் இதுவே தாமதம்தான். ஏனென்றால் இப்போதெல்லாம் டெலிவரி முடிந்ததும் அந்தப் பெண்ணுக்கு கோவிட் தடுப்பூசி போட்டுதான் வீட்டுக்கே அனுப்புகிறோம். உங்களுக்குப் பிரசவமாகி ஒரு மாதமாகிவிட்டதால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
தடுப்பூசி போட்டுக்கொண்டு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். தடுப்பூசியால் உங்களுக்கு உருவாகும் ஆன்டிபாடி, தாய்ப்பால் வழியே உங்கள் குழந்தைக்கும் போகும்.
இப்போது புழக்கத்தில் இருக்கும் எல்லா தடுப்பூசிகளுமே கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பாதுகாப்பானவையே.
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் காய்ச்சல் வருமே.. அத்துடன் பால் கொடுக்கலாமா... என்றால் கொடுக்கலாம். காய்ச்சல் வந்தால் பாராசிட்டமால் மாத்திரை போட்டுக்கொண்டு ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம். உங்களிடமிருந்து தாய்ப்பால் வழியே குழந்தைக்கும் காய்ச்சல் வருமோ என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/i-have-undergone-cesarean-and-family-planning-last-month-can-i-take-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக