"கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்ரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது"
கொரோனாவின்போது பணியாற்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்ரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. சண்முகப்ரியாவின் கணவர் விருதினை பெற்றுக்கொண்டார்.
"தமிழ்ச் சமூகமானது மனித உரிமை சமூகமாக மாற்றவேண்டும்"
"தமிழ்ச் சமூகமானது சிந்தனையால், பண்பாட்டால், நாகரிகத்தால், பழக்க வழக்கத்தால் உயர்வடைய வேண்டும். அதற்கு ஏற்றதாழ்வு அற்ற, உயர்வு தாழ்வு அற்ற ஒரு மனித உரிமை சமூகமாக மாற்றவேண்டும்" - முதல்வர் மு.க. ஸ்டாலின்
தியாகிகள் ஓய்வுத்தொகை ரூ.18,000 ஆக உயர்வு!
தியாகிகள் ஓய்வுத்தொகை ரூ.18,000 ஆக உயர்த்தப்படுவதாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.9000 உயர்த்தபடுவதாக தனது சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கும், கொரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
"அரசின் பொருளாதாரமும், தனி மனிதர்களின் பொருளாதாரமும் தன்னிறைவு பெற்றதாக மாற வேண்டும்"
“கொரோனாவிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் முயற்சிக்கு அடித்தளமான மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். இந்த அளவுக்கு மக்கள் மீண்டு வர உங்களது அர்ப்பணிப்பு தான் காரணம்" என முன்களப் பணியாளர்களைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், அரசின் பொருளாதாரமும், தனி மனிதர்களின் பொருளாதாரமும் தன்னிறைவு பெற்றதாக மாற வேண்டும் என்றார்.
"வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடத் திட்டம்"
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடத் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் காந்தி குறித்தும் காந்தியின் தமிழக வருகை குறித்தும் பேசியவர் மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடியில் நவீனமயமாக்கப்படும் என்றார்.
"எத்தனையோ முதல்வர்கள் வந்தாலும் தேசியக்கெகொடி ஏற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தது கலைஞர்தான்"
தேசியக் கொடியை ஏற்றியபின் முதல்வர் ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார். அப்போது சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தது கருணாநிதிதான் எனக் குறிப்பிட்டார். மேலும் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களைப் பாராட்டிப் பேசினார்.
சுதந்திரம் தினம்: கோட்டைக் கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். தேசிய கொடியை ஏற்றுவதற்குமுன் தமிழக காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. திறந்த ஜீப்பில் வலம் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
source https://www.vikatan.com/news/general-news/tamil-nadu-chief-minister-stalin-hoisted-the-national-flag
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக