Ad

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

கொடநாடு வழக்கு: `முன்னாள் முதல்வர் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டியதுதானே?!’ - கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள கே.புதுப்பட்டி, பனங்குடிப் பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட 11 லட்சம் மதிப்பிலான இரண்டு கலையரங்கங்களை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி கார்த்தி சிதம்பரம், ``தமிழக அரசு நீட் தேர்வுக்கான சட்ட மசோதா கொண்டுவருவது என்பது தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதே. அதுவே நீட் தேர்வை சட்டரீதியாகத் தடைசெய்யாது. மத்திய அரசு, மாநில அரசு, மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா சேர்ந்துதான் இதை முடிவு செய்ய முடியும்.

கார்த்தி சிதம்பரம்

இந்த ஆண்டு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதுபோல் நீட் தேர்வு நடக்கும். வரும் காலங்களில் நீட் தேர்வைத் தடை செய்ய திமுக அரசு முயற்சிகள் எடுக்கும் என்று நம்புகிறேன்.

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராகும் சட்டத்துக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வருக்கு ஞானோதயம் வந்திருக்கிறது. ஒன்பது முறை இந்தியாவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்த எனது தந்தையை, பொய்யான வழக்கில், அவருக்கு உறுதுணையான அரசு நடவடிக்கை எடுத்தபோது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஞானோதயம் வரவில்லை. தற்போது அவரும், அவருடைய கட்சியும் இதைச் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டியதுதானே...

எடப்பாடி பழனிசாமி

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க வேண்டும். பள்ளிகளைத் திறக்காமலேயே இருக்க முடியாது. பள்ளிகள் திறக்காத காரணத்தால் நிறைய குழந்தைகள் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். பள்ளி திறந்த பிறகுதான் எத்தனை குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள் என்பது தெரியவரும்.

கொரோனா காலகட்டத்தில் குழந்தைத் திருமணம் இந்தியாவில் அதிகம் நடைபெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது" என்றார்.

விகடன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரின் Promo...


source https://www.vikatan.com/government-and-politics/politics/mp-karthi-chidambaram-speaks-about-kodanadu-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக