"சிந்தனை, மனிதனுக்கு மட்டுமே இயற்கை கொடுத்திருக்கக்கூடிய மாபெரும் வரம். இந்த சிந்தனையை எப்படிப் புரிய வைப்பது. யாரோ ஒருவர் சிந்தித்ததை, நாம் வாழ்க்கையாகச் செயல்படுத்துகிறோமே தவிர நாம் புதிதாகச் சிந்திக்கிறோமா. இந்த உலகிலேயே மிகக் கடுமையான பணி என்பது சிந்திப்பது தான். மண்டைச் சுரப்பை உலகம் தொழும் என்றார் பெரியாரைப் பற்றி பாரதிதாசனார். நாம் சிந்தனை வாதிகளாக இருக்கிறோமா? எதை நாம் சிந்திக்கிறோம். உண்மையில் சிந்தனை என்ற சொல்லுக்குப் பொருள் என்னவென்றால், ஒன்றைப் புரிந்து கொள்வது. கல்வி என்பது சிந்தனை செய்வதற்கான வழிமுறை தான். வகுப்பறைகள் மட்டும் நம் சிந்தனையை வளர்த்து விடுவதில்லை. இந்த உலகம் நமக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. சிந்தித்தல் என்பது ஆகப்பெரிய வரம். அந்த சிந்தனை என்பது செயல்படுத்துவதற்கான மிக அற்புதமான ஒரு பொக்கிஷம், ஒரு கருவி."
சிந்தனை என்றால் என்ன? என்பதைப் பற்றி 'சொல் புதிது' என்னும் கீழ்க்கானும் காணொலியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
source https://www.vikatan.com/arts/literature/ananda-vikatan-sol-puthithu-show-by-parveen-sulthana-about-karl-marx-and-engels
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக