Ad

ஞாயிறு, 4 ஜூலை, 2021

Covid Questions: புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

எனக்கு வாய்ப்புற்றுநோய் இருக்குமோ என்ற பயம் உள்ளது. நான் கொரோனாவுக்கு எதிரான தடுப்பபூசியைப் போட்டுக் கொள்ளலாமா?

- சங்கர் பழனி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலி.

``வாய்ப் புற்றுநோய் பற்றிய உங்கள் கேள்விக்கு இரண்டு விளக்கங்கள் சொல்ல வேண்டும்.

வாய்ப் புற்றுநோய் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும் சரி அல்லது வாய்ப் புற்றுநோய் இருந்தாலும் சரி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடக்கூடாது என்று சொல்லப்படவில்லை. கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இன்னும் சொல்லப்போனால் புற்றுநோய் என்பது இணைநோய்கள் பிரிவில் வருவதால், நிச்சயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை புற்றுநோய் இருந்து, அதற்கான கீமோதெரபியோ, ரேடியோ தெரபியோ எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது சரியல்ல. அந்தச் சிகிச்சைகள் முடிந்து சில வாரங்கள் கழித்து அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அது குறித்து, புற்றுநோய்க்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

COVID-19 vaccine

Also Read: Covid Questions: கொரோனா தொற்று குறைகிறது; இன்னும் நான் மாஸ்க் அணியத்தான் வேண்டுமா?

உங்கள் கேள்வியில் உங்களுக்கு வாய்ப் புற்றுநோய் இருக்குமோ என்ற பயமிருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இந்நிலையில் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயம் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது. புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும். ஒருவேளை புற்றுநோய் இருந்தால் தாமதிக்காமல் அதற்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். தடுப்பூசியையும் தவிர்க்க வேண்டாம்".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/can-cancer-patients-take-covid-19-vaccines

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக