Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

TamilNadu Assembly: 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்! - ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது!

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்!

தமிழகத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைபற்றியது. அதனை தொடர்ந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 15-வது சட்டசபை நிறைவடைந்து 16-வது சட்டசபை அமைந்துள்ளது. 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் 21-ம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு கடந்த 9-ம் தேதி அறிவித்தார். அதன்படி 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

சட்டசபை

கடந்த வாரம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்தார். சட்டசபை மரபுப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். காலை 10 மணிக்கு ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதனை தொடர்ந்து, அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் வாசிப்பார். அதோடு இன்றைய அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.

தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-assembly-starts-today-with-governor-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக