Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

தமிழ்நாடு ஊரடங்கு தளர்வுகள்: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியது! #NowAtVikatan

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு! 

கடந்த மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், தொடர்ந்து தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

சென்னை பேருந்து

அதன்படி, நோய் தொற்று பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை 1-ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும். வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. வகை 3-ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி அரசு பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கியது.



source https://www.vikatan.com/news/general-news/21-06-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக