Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

`பா.ஜ.க வென்ற இடங்களில் கல்வித் தரத்தை உயர்த்துவோம்' - இப்படிச் சொன்னாரா பினராயி விஜயன்?!

கடந்த மாதம் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அமோக வெற்றி பெற்றது. 40 நகராட்சிகளைக் கைப்பற்றியது எல்.டி.எஃப். பா.ஜ.க-வுக்கு கிடைத்தது வெறும் இரண்டே நகராட்சிகள்தாம். இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த மீம்ஸில் பின்வருமாறு உள்ளவை இடம்பெற்றிருந்தன.

நிருபர்: உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறதே?

Also Read: கேரள உள்ளாட்சித் தேர்தல் : `தங்கக் கடத்தல்’ தகதகக்கவில்லை... எப்படி வென்றது இடது ஜனநாயக முன்னணி?

நிருபர் கேட்ட கேள்விக்கு பினராயி விஜயன் இப்படிப் பதிலளித்தாக ட்விட்டரில் சிலர் பதிவிட, அது எல்லா சமூக வலைதளங்களிலும் வைரலானது. தமிழ், ஆங்கிலம், மலையாளம் என எல்லா மொழிகளிலும் இது மீம்ஸாக பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

உண்மையிலேயே பினராயி விஜயன் அப்படிச் சொல்லியிருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். மலையாள செய்தித் தளங்களில், பினராயி அப்படிச் சொன்னதாக ஒரு செய்திகூட வெளியாகவில்லை. ஆங்கில செய்தி ஊடகங்களில் இது குறித்துத் தேடிப் பார்க்கும் போதும், பினராயி விஜயன் அப்படிச் சொன்னதாக எந்தச் செய்தியும் பதிவு செய்யப்படவில்லை. அவர் அப்படிப் பேசியதற்கான வீடியோ ஆதாரங்களும் இல்லை.

பினராயி விஜயன்

டிசம்பர் 22-ம் தேதி சில ஆங்கில ஊடகங்களில், ``கேரளாவின் உயர்கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன'' என்று பினராயி விஜயன் கூறியதாகச் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், எந்த இடத்திலும் அவர் பா.ஜ.க குறித்து பேசியதாகச் செய்திகளில் சொல்லப்படவில்லை.

மேலும், இது குறித்து கேரளத்தைச் சேர்ந்த சிலர், `` ட்விட்டரில் ஒருவர் போலியாகப் பதிவிட்ட கருத்துதான் இது. இந்தக் கருத்து ரசிக்கும் படியானதாக இருப்பதால் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியுள்ளதே தவிர, முதல்வர் பினராயி விஜயன் அப்படிச் சொல்லவில்லை. உண்மையிலேயே முதல்வர் அப்படிச் சொல்லியிருந்தால் இந்திய அளவில் மிகப் பெரிய செய்தி ஆகியிருக்கும். பா.ஜ.க-வினரும் பினராயி விஜயனுக்கு எதிர்க் கருத்து வைத்து விமர்சித்திருப்பார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை என்ற போதே, இது போலி செய்திதான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது'' என்கின்றனர்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/is-pinarayi-vijayan-said-that-we-work-to-improve-the-quality-of-education-in-bjp-winning-places

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக