Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

நாகை: வாயை மூடி கோயிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை! - விதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சித்தாள் வேலைக்கு சென்று வந்த ஏழைப் பெண்ணை வாயை மூடி கோயிலுக்குள் தூக்கிச்  சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

கைதான, அப்பாஸ் என்கிற அருண்ராஜ் - ஆனந்தராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச்  சேர்ந்த வேதையன் என்பவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென  இறந்துவிட, திக்கற்ற நிலையில் 2  பெண் குழந்தைகள் வைத்துக்கொண்டு எப்படி வாழ்வது என்று தெரியாமல் தவியாய் தவித்த அந்தப் பெண்மணி, நாகப்பட்டினத்திலுள்ள தங்கை சரோஜா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆதரவுடன் நாகத்தோப்பு என்ற இடத்தில் வசித்து வந்தார். பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கவேண்டுமே என்று  தனக்கு பரிச்சயமில்லாத கட்டட சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். தற்போது பெண் பிள்ளைகள் இருவரும் வளர்ந்து பெரியவளாகி விட்டார்கள். அவர்களுக்கு கல்யாணம் முடித்து கரையேற்ற வேண்டுமே என்ற கவலையில் தினந்தோறும்  வேலை விட்டு வரும்போது, வீட்டுக்கு  அருகேயுள்ள பிள்ளையார் கோயிலில் வந்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்தான் கடந்த 6 -ம் தேதி இரவு 9 மணி அளவில் வழக்கம்போல் அப்பெண்மணி வேலை முடிந்து  பிள்ளையார் கோயிலுக்கு வந்து வணங்கியிருக்கிறார். அப்போது திடீரென இரண்டு இளைஞர்கள் வாயை மூடி கோயிலுக்கு உள்ளே தூக்கி சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

"இதை  யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் உன்னை உயிரோடு விடமாட்டோம். அதுமட்டுமல்ல உன் வீட்டுக்கே வந்து உனது இரண்டு பெண்களையும் உன்னை செய்தது போல் நாசப்படுத்தி விடுவோம்" என்று மிரட்டி சென்றிருக்கிறார்கள். இரவு 2 மணிக்கு நடுக்கத்துடனும், தடுமாறி, அலங்கோலத்துடன்  வீடு வந்து சேர்ந்த அக்காவை பார்த்ததும் அதிர்ந்து போனார் சரோஜா. நடந்ததை அப்பெண்மணி சொல்ல சரோஜாவின் கணவர் கிருஷ்ணமூர்த்தி  சம்பந்தப்பட்டவர்கள் யாரென கண்டறிந்திருக்கிறார்.  

Also Read: நிர்பயா சம்பவத்தைப் போன்ற கொடூரம் - உ.பி-யில் 50 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

அக்கரகுளத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஆனந்தராஜ் (வயது 25), வண்டிப்பேட்டையைச்  சேர்ந்த முருகன் மகன் அப்பாஸ் என்கிற அருள்ராஜ் ( வயசு 25)  ஆகிய இருவரும்தான் சீரழித்தவர்கள் என்பதை உறுதி செய்துகொண்டு, ஊர் பஞ்சாயத்தில்  முறையிட்டுயிருக்கிறார். அங்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர்,  `இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாம்’ என்று மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

இளைஞர்கள் கைது sp office

மேலும், ``நீ எப்படி ஊர் பஞ்சாயத்தில் முறையிடலாம்?"என்று கூறி அப்பாஸ்  என்கிற அருண் ராஜ், கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கியிருக்கிறார். அதன்பின்புதான் உயிருக்குப்  பயந்து வெளிப்பாளையம் காவல் நிலையத்தில்  நேற்றிரவு (ஜன. 7) புகார் அளித்திருக்கிறார்கள்.

இதுபற்றி வெளிப்பாளையம் காவல் நிலைய வட்டாரத்தில் விசாரித்தோம், ``புகார் கிடைத்தவுடனே  இரவுக்குள் ஆனந்தராஜ் மற்றும்  அப்பாஸ் என்கின்ற அருண்ராஜ்  இருவரையும் கைது செய்திருக்கிறோம். அப்பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். ஏழைப் பெண்ணுக்கு கொடுமை செய்த இவர்கள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபின் சிறையிலடைக்க உள்ளோம். இவர்கள் மீது 294 (b), 376, 363 ஆகிய கடும் பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/nagai-two-youths-arrested-for-sexually-abusing-a-widow-inside-a-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக