கொரோனா என்ற கொடூர காலகட்டதில் பலரும் கஷ்டத்தை அனுபவித்தனர். உயிர் பயத்தை ஏற்பத்திய கொரோனோ நோய் தொற்றுக்கு அரசு மருத்துவமனையையும், தனியார் மருத்துவமனையை நாடினர். இந்நிலையில் கொரோனா நோய் தொற்றுக்கு சில தனியார் மருத்துவமனைகள் லட்சக் கணக்கில் வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கமால் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார், ``கொரோனா என்ற கொடிய நோய் தொற்றால் பாதிப்பு அடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பல தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்தது.
இதனை சில தனியார் மருத்துவமனைகள் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு கூடுதல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தொற்று இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் பலரும் தங்களின் பணத்தை அதிகளவு இழந்துள்ளனர். மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று இல்லாத எனக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற்றதற்கான தொகையை செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
ஆனால் அரசு விதிமுறைப்படி குறைந்த அளவிலான தொகை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று பல மருத்துவமனைகள் கொரோனா காலத்தை தவறாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்கான தொகை என வசூலிக்கின்றனர். இதை அரசு உடனடியாக உற்று நோக்கி அளவுக்கதிகமாக வசூல் செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கொரோனா இல்லாத எனக்கு,போலியாக சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுத்து, மருத்துவமனையின் அனுமதியை ரத்து செய்து, செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் மருத்துவமனை சார்பில் உரிய பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/case-against-the-private-hospital-that-collect-high-fee-for-corona-treatment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக