Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

சென்னை: `சாமி போட்டோக்களில் ரத்தம்!'- போலீஸ் இன்பார்மரான வி.சி.க பிரமுகர் கொலை

சென்னை வண்ணாரப்பேட்டை வீராகுட்டி தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (40). விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்.கே.நகர் பகுதி துணைச் செயலாளராக இருந்தார். இவரின் மனைவி பிரியா (38). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கேசவன், தன்னுடைய வீட்டின் அருகில் அம்மன் கோயில் ஒன்றை கட்டிவந்தார். நேற்று ஆடிமாதம் கடைசி நாள் என்பதால், கோயிலில் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தார்.

கொலை நடந்த இடம்

அப்போது அங்கு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து, கேசவனிடம் தகராறில் ஈடுபட்டது. பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் கேசவனை அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியது. அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க கேசவன் ஓடினார். ஆனால் அவரை விடாமல் துரத்திய மர்மகும்பல் சுற்றி வளைத்து வெட்டி சாய்த்தது. கேசவனின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்தனர். அதைப்பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

Also Read: `குடும்பத்தினருடன் பிரச்னை; பாலியல் வன்கொடுமை!’- உ.பியை அதிரவைத்த 13 வயது சிறுமி கொலை

ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கேசவனை மீட்ட பொதுமக்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் தண்டையார்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். கேசவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கேசவனின் கொலை குறித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மதனின் வீட்டை சேதப்படுத்தும் பெண்

இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீஸார் கூறுகையில், ``வி.சி.க பிரமுகர் கேசவனை கோயில் அருகில் வைத்து 6 பேர் கொண்ட கும்பல் வெட்டியுள்ளது. அதைப்பார்த்த அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு ஓடிவந்துள்ளனர். அதனால், மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. அப்போது அங்கிருந்த ஆட்டோ, பைக் மற்றும் பொருள்களை அந்தக் கும்பல் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது.

கேசவன் கொலைக்கு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை தொழில் போட்டியே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமரா பதிவு மூலம் கேசவனைக் கொலை செய்தவர்களை அடையாளம் கண்டுள்ளோம். இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரைப் பிடித்துள்ளோம். அவர், கள்ளச்சந்தையில் மதுபானங்கள் நீண்டகாலமாக விற்று வந்துள்ளார்.

கொலை நடந்த இடம்

Also Read: சென்னை: `செல்போனுக்கு வந்த முகம் சுளிக்கவைக்கும் வீடியோக்கள்!’ - இளைஞரைச் சிக்கவைத்த தாய், மகள்

மதனிடம் விசாரித்தபோது கேசவனும் சமீபத்தில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்று வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேசவன், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற மதன் குறித்த தகவலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளார். போலீஸ் இன்பார்மரான கேவசனைக் கொலை செய்ய மதன் தலைமையிலான கும்பல் நீண்டகாலமாகத் திட்டமிட்டுவந்துள்ளது. தனியாக நின்றுக் கொண்டிருந்த கேவசனை, மதன் கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. இந்தக் கொலை சம்பவத்தில் தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகிறோம்"என்றனர்.

கொலை கும்பலிடமிருந்து தப்பிக்க கேசவன் ஓடியதால், அவரின் ரத்தம் ஆங்காங்கே சிதறிக்கிடந்தது. கோயிலில் வைக்கப்பட்டிருந்த சாமி போட்டோக்களின் மீதும் கேசவனின் ரத்தம் விழுந்திருந்தது. அவரைக் கொடூரமாக கொலை செய்த கும்பல், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக், ஆட்டோ ஆகியவை சேதப்பட்டப்படுத்திவிட்டு சென்றிருந்தன.

உருட்டுகட்டையோடு ஓடும் பெண்

கேசவன் கொலை குறித்து துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, கார்த்திக் மற்றும் போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது கேசவனின் உறவுக்காரப் பெண் ஒருவர் உருட்டுகட்டை ஒன்றை தூக்கிக் கொண்டு மதன் வீட்டை நோக்கி ஓடினர். அங்கு அவரின் வீடு பூட்டிப்பட்டிருந்தது. அதனால் வெளியில் இருந்த சுவிட்ச் போர்டை உருட்டுகட்டையால் அந்தப் பெண் தாக்கி உடைத்தார். அந்தப் பெண்ணின் மகள், வேண்டாம் அம்மா என்று கூறினார். அதன்பிறகு அந்தப் பெண், போலீஸ் கண் எதிரிலேயே உருட்டுக்கட்டையை தூக்கிக் கொண்டு புறப்பட்டு சென்றார். இந்தக் கொலை சம்பவம் போலீஸ் இணை கமிஷனர் அலுவலகம் அருகிலேயே நடந்துள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமலிருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கள்ளச்சந்தையில் நடந்த மதுபானம் விற்பனையை கமிஷன் வாங்கிக் கொண்டு போலீஸார் தடுக்கவில்லை என கேசவனின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-vck-cadre-murdered-in-tondiarpet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக