பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
என் இளைய மகளுக்கு நேற்று பிறந்த நாள். நான் அவளுக்காக எழுதிய கவிதையை இங்கே பகிர்கிறேன். ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு முன்பு என் மூத்த மகளுக்கு நான் எழுதிய கவிதை விகடன் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன்.
தேவதையே பூமகளே
சின்ன மகாராணி!
கனவுல நீ இருக்க
கண்டபடி தான் சிரிக்க
நெஞ்சுக்குள்ள நிக்குதடி உன் பாசம்...
ஒத்த பள்ளு தான் முளைச்சு
எந்துருச்சு நீ நடந்து
எட்டு வைக்க போகையிலே
நெஞ்சம் கூசும்...
அடி தேவதையே...
என் மகளே, எங்க வீட்டு ராணி
உன் பாதம் பட்டு பூக்குதடி நெஞ்சில் பூச்செடி...
கட்ட விரல் நீ சூப்பி
நெஞ்சிமேல தல சாஞ்சி
அப்பன் சொல்லும் கதையினிலே
நீ தூங்க..
ராத்திரி நேரத்துல
நீ பேசும் தாலாட்டுல
என் சோகம் கரையுதடி
சின்ன கண்மணி..
அக்கா போல நீ இல்ல
அவளும் நீயும் வேறில்லை
ஒத்த நிலா ரெண்டா வந்தா என்ன செய்ய?
சந்தோஷத்துல மிதக்குறேன்
தலைகீழா பறக்குறேன்
அப்பன் நான் பட்ட இன்பம் சொல்லி தீரல..
சொக்க வைக்கும் அழகுல
பொன் சிரிப்பு முகத்துல
அத்தனையும் மறக்குறேன்..
உன்னை சுத்தி நடக்குறேன்..
என் இளைய மகளே
இரண்டாம் இதயமே!
என் சொர்கத்து தோட்டத்தின்
இரண்டாம் பூவே!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
- அன்புடன் அப்பா (மொ. சாகுல் ஹமீது , திருச்சி)
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-birthday-poetry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக