நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த மாணவி தான் காதலித்த நபரோடு சென்று, ரகசிய திருமணம் செய்துகொண்ட சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: கனவான அமைச்சர் பதவி; எம்.பி வேட்பாளராக்கிய `திருமதி முதன்மை’ - ராஜேஸ்குமார் தேர்வானது எப்படி?
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஸ்வேதா, தற்போது நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். ஏற்கனவே ஒருமுறை இந்த நீட் தேர்வை எழுதிய அவர், அதில் தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில், ஸ்வேதா தற்போது இரண்டாவது முறையாக நீட் தேர்வை எழுதினார்.
அதன்பிறகு, ஸ்வேதா தனது பெற்றோரிடம், தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மூன்று நாள்களாக வீட்டிற்கு திரும்பவில்லையாம். இதனால், பதறி போன பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி வந்தனர். மாணவி ஸ்வேதாவின் தோழிகள் வீடுகளுக்கெல்லாம் சென்று விசாரித்தனர். ஆனால், ஸ்வேதா எங்கும் இல்லாததால், அவரின் பெற்றோர் நாமகிரிபேட்டை காவல் நிலையத்தில், நீட் எழுதிவிட்டு வீட்டைவிட்டு சென்ற தங்கள் மகளை காணவில்லை என்று புகார் அளித்தனர். அவர்களின் புகாரைப் பெற்றுக்கொண்ட நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார், வீட்டை விட்டுச் சென்ற ஸ்வேதாவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த மாணவியின் தந்தை செந்தில்பாண்டியன், அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். ஸ்வேதா தனியார் பள்ளியின் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருக்கிறார். கடந்த வாரம் திருச்செங்கோட்டில் உள்ள அந்த தனியார் பள்ளியில் சுவேதா நீட் தேர்வு எழுதினார். அதனால், போலீஸார் திருச்செங்கோடு தனியார் பள்ளி மற்றும் இந்த மாணவியின் தோழிகள் என பலதரப்பிடம் விசாரணை நடத்தினர். ஆனால், ஸ்வேதா காணாமல் போனது பற்றி எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தங்களது மகள் நீட் தேர்வுக்கு பயந்து, ஏதாவது தவறாக முடிவெடுத்துவிட்டாளோ என்று அவரது பெற்றோர் கண்ணீர் வடித்தனர்.
இதனால் குழப்பமடைந்த நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார், மாணவி ஸ்வேதாவின் வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, தோழி வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டுச் சென்ற ஸ்வேதா, வீட்டை விட்டு வெளியே வந்தது, தனது துப்பட்டாவை கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு, இளைஞர் ஒருவருடன் பைக்கில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் ஸ்வேதாவை கூட்டிச் சென்ற இளைஞர் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில், ஸ்வேதா தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்தார். ஸ்வேதாவுக்கு சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் மகன் டேனியல் (வயது: 26) என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. டேனியல் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில்தான், டேனியல் சென்னையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் நாமகிரிப்பேட்டைக்கு வந்துள்ளார். பின்னர், ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு தேனியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். நண்பர் வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி முருகன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர், தேனி மாவட்டம் சென்று உத்தமபாளையத்தில் நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர்.
Also Read: ரயிலில் அனுப்பப்பட்ட பெண் உடல் மாயம்; 200 கிலோமீட்டர் தூரத்தில் மீட்பு!
இந்நிலையில், ஸ்வேதாவை நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார் தீவிரமாக தேடுவதை அறிந்துகொண்ட இருவரும், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து, காதல் ஜோடியை அழைத்து வருவதற்கு நாமகிரிபேட்டையில் இருந்து தனிப்படை போலீஸார் தேனிக்கு விரைந்துள்ளனர். அங்கு காதல் ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
source https://www.vikatan.com/news/crime/twist-in-student-missing-case-in-namakkal-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக