Ad

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

காதலியுடன் போனில் பேச்சு; தவறி கிணற்றில் விழுந்து, இரவு முழுவதும் தவித்த இளைஞர்!

இரவு நேரத்தில் காதலியுடன் போனில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், கவனக்குறைவாக கிணற்றில் தவறி விழுந்ததோடு, பத்து மணி நேரத்திற்கு மேலாக தத்தளித்துக் கொண்டிருந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல்

Also Read: கனவான அமைச்சர் பதவி; எம்.பி வேட்பாளராக்கிய `திருமதி முதன்மை’ - ராஜேஸ்குமார் தேர்வானது எப்படி?

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகில் இருக்கிறது புதன்சந்தப்பேட்டை. இந்தப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞர், அந்த பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. நூற்பாலையில் பணி முடிந்ததும், ஓய்வுநேரத்தில் தினந்தோறும் அந்த பெண்ணுடன் ஆஷிக் செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தாராம்.

இந்த நிலையில், தனியார் நூற்பாலையில் வேலை நேரம் முடிந்ததும், அந்த நூற்பாலைக்கு அருகே உள்ள கிணற்றுப் பகுதியில் நின்று கொண்டு இரவு தனது காதலியுடன் செல்போனில் ஆஷிக் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, பேச்சு சுவாரஸ்யத்தில் கவனக்குறைவாக அருகில் இருந்த கிணற்றை கவனிக்காத ஆஷிக், கால் தவறி கிணற்றில் கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியான ஆஷிக், தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட்டு உதவி கேட்டுள்ளார். ஆனால், இரவு நேரம் என்பதால், ஆஷிக் எழுப்பிய சத்தம் போட்டும் யாருக்கும் கேட்கவில்லை. இதனால், அந்த இளைஞர் கிணற்றிலேயே 10 மணி நேரத்திற்கு மேலாக கிடந்துள்ளார். இரவு முழுவதும் அங்கேயே நடுங்கியபடி நேரத்தை கடத்தியிருக்கிறார்.

அந்த கிணறு

இந்த நிலையில், காலையில் அப்பகுதி வழியே மக்கள் நடமாட்டத்தை அறிந்த ஆஷிக், மீண்டும் உரக்க சத்தம் எழுப்பி, உதவி கேட்டுள்ளார். அப்போது, கிணற்றுக்குள் இருந்து சத்தம் வரவும், அதிர்ச்சியான அவ்வழியே சென்ற சிலர், உடனடியாக கிணற்றுக்கு அருகே சென்று, கிணற்றுக்குள் எட்டி பார்த்துள்ளனர். அப்போது, கிணற்றுக்குள் இளைஞர் ஆஷிக் தன்னைக் காப்பாற்றும்படி கூக்குரல் எழுப்புவதைக் கேட்டனர். இதையடுத்து அவர்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கயிறு மூலம் அந்த இளைஞரை மீட்டனர். அதோடு, இளைஞருக்கு கைமுறிவு ஏற்பட்டிருந்ததால், உடனடியாக ஆஷிக்கை பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த கிணற்றில் ஏறி வருவதற்கு படிகள் இல்லாததால், ஆஷிக் 10 மணி நேரத்துக்கு மேலாக கிணற்றுக்குள் தத்தளிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. 'காதலுக்கு கணில்லை' என்பது இவரது விசயத்தில் ஒத்துப்போகிறது' என்று பள்ளிப்பாளையம் மக்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/namakkal-youth-fell-down-into-well

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக