Ad

திங்கள், 20 செப்டம்பர், 2021

தேனி: உத்தமபாளையம் ஒன்றியத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! -அதிமுக-வினர் 9 பேர் நீக்கம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 வார்டுகள் உள்ளன. கடந்த 2019 இறுதியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 7, திமுக 3 இடங்களில் வென்றன. இதில் அதிமுகவைச் சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதன் தலைவராகவும் , மூக்கம்மாள் கெத்துராஜ் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டம்

இத்தகையைச் சூழலில், திங்கள் கிழமை காலை உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் கெளசல்யா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறியல்

இதனிடையே, உத்தமபாளையத்தில் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஒன்றியத் தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனை சந்தித்தார். அப்போது சுய அலுவல் காரணமாக பதவியை தொடர முடியாத நிலை உள்ளதாகக் கூறி ஆட்சியரிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் ஜான்சி

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குழு உறுப்பினர்களாக இருந்த 6 பேர் உள்பட 9 அதிமுக நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Also Read: `மாநில சுயாட்சி' பேசுகிறீர்கள்; ஆனால், உள்ளாட்சி அதிகாரத்தில் கை வைக்கிறீர்கள்; இது சரியா ஸ்டாலின்?

தேனி மாவட்ட அதிமுகவினர், `திமுகவினர் தூண்டுதலின் பேரில் தான் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர்’ எனப் புகார் தெரிவித்துள்ளனர்.
அதிமுக தேனி மாவட்டச் செயலாளரின் சொந்த ஊரில் அதிமுக ஒன்றியத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/resolution-of-no-confidence-on-chairman-of-the-uthamapalaiyam-union

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக