Ad

சனி, 21 ஆகஸ்ட், 2021

Covid Questions: Wolff-Parkinson-White (WPW) Syndrome பிரச்னை உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போடலாமா?

Wolff-Parkinson-White syndrome (WPW) பிரச்னையால் பாதிக்கப் பட்டவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- கிருஷ்ணசந்திர பிரபாகரன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``Wolff-Parkinson-White syndrome என்பது இதயம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. இதயத்தின் மேல் மற்றும் கீழ்ப் பகுதியிலுள்ள இரண்டு அறைகளுக்கு (சேம்பர்) இடையே கூடுதலாகவும் தவறுதலாகவும் ஏற்படுகிற மின்சார இணைப்பு போன்ற ஒன்றால் ஏற்படும் பாதிப்பு.

இது பலரிடமும் காணப்படுகிற பிரச்னைதான் என்றாலும் பெரும்பாலும் பலருக்கும் எந்தத் தொந்தரவையும் தருவதில்லை. சிலருக்கு மட்டும் திடீரென ஒருவித படபடப்பு, மயக்கம் போன்றவை வரலாம். Wolff-Parkinson-White syndrome பாதிப்பு இருப்பவர்களும் அவசியம் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

COVID-19 vaccine

Also Read: Covid Questions: வலிப்பு உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

இது மட்டுமல்ல, எந்தவிதமான இதய நோய் உள்ளவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி மிக முக்கியம். இதயநோய்களை இணை நோய்களாகக் கருதி, தாமதிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/health/healthy/can-people-suffering-from-wolff-parkinson-white-syndrome-take-covid-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக