Ad

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

திருச்சி: இரண்டு பேரைத் தாக்கிய சிறுத்தை! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறை!

திருச்சியில் சிறுத்தை தாக்கியதில் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை பிடிபடும் வரையிலும் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்று அதிகாரிகள் தண்டோரா மூலம் அறிவுறித்தி வருகிறார்கள்.

திருச்சி

திருச்சி, துறையூர் உப்பிலியபுரத்தில் ஆங்கியம் பகுதி உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இந்தப் பகுதியில் காட்டு மிருகங்கள் நடமாட்டம் காணப்படும். மான்கள், கரடி உள்ளிட்ட பல விலங்குகள் இந்த வனப்பகுதியில் வசிப்பதாக வனத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், மான்கள் மட்டும் அவ்வப்போது வாகனங்களில் அடிபடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஹரிபாஸ்கர் என்பவர் ஆங்கியம் பகுதியின் கடைகோடியில் உள்ள ஆங்கியம் கரடு பகுதியில் உள்ள குகை ஒன்றின் முன்னாள் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக குகைக்குள் இருந்து சிறுத்தை ஒன்று வெளியில் பாய்ந்து வந்து ஹரிபாஸ்கரைத் தாக்கியுள்ளது. அப்போது அவருடன் சென்ற விவசாயி துரைசாமி சிறுத்தையிடமிருந்து காப்பாற்ற கம்பு எடுத்திருக்கிறார். அவரையும்,சிறுத்தை தாக்கியது,

ஹரிபாஸ்கர்

இருவரும், 'எங்களைக் காப்பாற்றுங்கள்!' என்று சத்தம் போட சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிலர் ஓடி வந்ததால் சிறுத்தை தப்பி ஓடியது. காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வனத்துறையினர், உப்பிலியபுரம் காவல்துறையினர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியைப் பொறுத்தவரை சிறுத்தை தாக்கி மனிதர்கள் காயம் அடைந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தண்டோரா போடப்பட்டு சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது.

சிறுத்தையால் தாக்கப்பட்ட விவசாயி

மேலும் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி கட்டி சிறுத்தை பிடிபடும் வரையிலும் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டும் வருகிறது.

சிறுத்தை

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.”சிறுத்தையைப் பிடிப்பதற்காகக் கூண்டுகள் அமைத்திருக்கிறோம். அத்தோடு, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்திருக்கிறோம். இன்று அதிகாலை ஆங்கியம் கிராமத்தின் எல்லைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கேமராவில். சிறுத்தை ஊர் எல்லையைத் தாண்டி வெளியேறும் காட்சியைப் படம் பிடித்திருக்கிறது. எங்களுடைய அனுமானம் சரியாக இருந்தால் கொல்லி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்குச் சென்று இருக்கலாம். சிறுத்தை பிடிப்பதற்காகப் பல வழிகளில் முயற்சி மேற்கொண்டுள்ளோம்" என்றனர்



source https://www.vikatan.com/news/tamilnadu/forest-officers-alert-people-should-not-out-from-their-house-in-thiruchirapalli

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக