Ad

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

கோவா: பொதுமக்கள் எதிர்ப்பு; தேசியக் கொடி ஏற்றும் திட்டத்தை ரத்து செய்த கடற்படையினர்?!

நாடு முழுவ்தும் இன்று 75வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75வது சுதந்திரத்தினத்தையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பாக கடற்படையினர் ஆகஸ்ட் 13ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை ஆசாத் கி அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில் நாடு முழுவதும் இருக்கும் தீவுகளில் தேசிய கொடியை ஏற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து இந்தியத் தீவுகளிலும் தேசியக் கொடியைக் கடற்படையினர் ஏற்றி வருகின்றனர். கோவாவில் அது போன்று சாவோ ஜசின்டோ என்ற தீவில் தேசியக் கொடியை ஏற்ற கடற்படையினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரமோத் சாவந்த்

உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இத்தீவில் தேசிய கொடியை ஏற்றும் திட்டத்தை கடற்படையினர் ரத்து செய்தனர். இது தொடர்பாக கடற்படையின்செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில், "கோவா கடற்படையினர் அங்குள்ள தீவுகளுக்கு சென்று தேசியக் கொடியை ஏற்றுவது குறித்து ஆய்வு செய்ய சென்றனர். ஆனால் சாவோ ஜசின்டோ தீவில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு தேசியக் கொடியை ஏற்றும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. தேச உணர்வைப் பரப்பும் விதத்திலும், 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஆசாத் கி அம்ரித் மஹோத்சவ் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று தெரிவித்தார். ஆனால் கடற்படையினர் திட்டமிட்ட படி 'சாவோ ஜசின்டோ' தீவில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்" என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கேட்டுக்கொண்டுள்ளார். தேசியக் கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய கொடியை ஏற்ற கடற்படைக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்றும் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

ஆனால் இது குறித்து அத்தீவு மக்கள் கூறுகையில், "நாங்கள் தேசிய கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் துறைமுக ஆணைய மசோதாவின் கீழ் எதிர்காலத்தில் இத்தீவை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்ற அச்சம் காரணமாகவே எதிர்ப்பு தெரிவித்தோம். தேசியக் கொடியை ஏற்றுவது அதன் தொடக்கமாக இருக்கும் என்று சந்தேகிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். என்ன விலை கொடுத்தேனும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தே தீரும் என்று முதல்வர் சாவந்த் தெரிவித்தார். கோவாவில் ஐ.என்.எஸ் ஹன்சா கடற்படை தளத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சாவோ ஜசின்டோ தீவில் வெறும் 100 குடும்பங்கள் மட்டும் வசிக்கின்றன. அத்தீவில் வசிக்கும் அந்தோனி இது குறித்து கூறுகையில், கடற்படையினர் தேசிய கொடியை ஏற்ற நான் ஏற்கனவே கடற்படை அதிகாரிகளிடம் ஒப்புதல் கொடுத்துவிட்டேன். ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் எனது வீட்டிற்கு வந்து, 'ஏன் தேசியக் கொடியை ஏற்ற அனுமதித்தாய்' என்றும், எதிர்காலத்தில், 'தீவை எடுத்துக்கொள்வார்கள்' என்றும் தெரிவித்தனர். அவர்களின் கவலையை கடற்படையிடம் தெரிவித்தேன் என்றார். சியக் கொடியை ஏற்றவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: சுதந்திர தினம்: `சர்ஜிக்கல் ஸ்டிரைக் முதல் விரைவில் மிகப்பெரிய திட்டம் வரை..!’ பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

மற்றொரு தீவுவாசியான டிசோசா இது குறித்து கூறுகையில், "தேசிய கொடி ஏற்றுவது பிரச்னையே இல்லை. சுதந்திர தினத்தை கடற்படையினர் எங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் தீவை எடுத்துக்கொள்வார்களோ என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இத்தீவில் உள்ள மக்கள் இந்த பயம் காரணமாகவே வெளியில் உள்ள யாருக்கும் நிலத்தை விற்பனை செய்வதில்லை என்று முடிவு செய்துள்ளனர். எப்படியாவது தீவைப் பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகிறோம். எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். கடற்படையினர் தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்திருப்பது குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தேசியகொடியை ஏற்ற சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது துரதிஷ்டவசமானது மற்றும் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார். இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் எனது அரசு இதனை பொறுத்துக்கொள்ளாது என்றும், கடற்படையினர் திட்டமிட்டபடி தே



source https://www.vikatan.com/news/india/the-public-has-strongly-opposed-the-hoisting-of-the-national-flag-on-the-island-of-goa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக