லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் கந்தசாமி ஐ.பி.ஸ்., கடந்த ஒரு மாதமாக, அ.தி.மு.கழக ஆட்சி நடந்த போது கட்சிப் பிரமுர்கள், கான்ட்ராக்டர்கள் யார் யார் மீது ஆதாரங்களுடன் புகார் வந்திருக்கின்றன என்று துருவியிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு புகார் பெண்டிங்கில் இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில்தான், மாநகராட்சி கான்ட்ராக்டர் வெற்றிவேலுவின் வீட்டில் நேற்று மாலை ரெய்டு நடந்து வருகிறது. சென்னையைச் சேர்ந்த உயரமான முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர், அ.தி.மு.க-வின் முன்னாள் பெண் அமைச்சர் ஆகியோரின் ஆசி பெற்ற கான்ட்ராக்டர் வெற்றிவேல். சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர்.
கடந்த சில வருடங்களில் அவரின் அபார வளர்ச்சி பற்றி அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் போய்க்கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, அந்த எம்.எல்.ஏ-வின் நிதியில் கே.கே.நகர் ஏரியாவில் இண்டோர் ஸ்டேடியம் ஒன்று கட்டப்பட்டதாம். அரசு விதிகளுக்குப் புறம்பாக வெற்றிவேலுக்கு கான்ட்ராக்ட் கிடைக்கும் வகையில் சில உள்ளடி வேலைகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் போனதாம். அதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் இண்டோர் ஸ்டேடியம் தொடர்பான டெண்டர் ஃபைல்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரகசியமாக ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், வெற்றிவேலு வீட்டில் திடீர் ரெய்டு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வட்டாரம் சொல்கிறது. கடந்த ஆட்சியில் விதிகளை வில்லாக வளைத்து கான்ட்ராக்ட் பெற்ற சிலர் தற்போது கலக்கத்தில் இருக்கிறார்கள்.
Also Read: வேலுமணி விவகாரம்: தொடரும் `ரெய்டுகள்’... விசாரணை வளையத்தில் அதிகாரிகள்!
source https://www.vikatan.com/government-and-politics/politics/reason-behind-the-raid-in-corporation-contractor-properties
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக