Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

''பியானோவோடு வந்து சர்ப்ரைஸ் கொடுத்த மணிரத்னம்... இது எங்க 60-ம் கல்யாணம்!'' - நெகிழும் சுஹாசினி

இந்தியாவின் 75-வது சுதந்திரத் திருநாள் அன்று கமல்ஹாசனின் அலுவலகத்தில் இன்னொரு கொண்டாட்டமும் நிகழ்ந்திருக்கிறது. அது சுஹாசினி மணிரத்னத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம். ஹாசினியை வாழ்த்த கமலின் தலைமையில் 80'ஸ் தலைமுறை நடிகர்கள் எல்லோரும் ஒன்றுகூடியிருக்கிறார்கள். சுஹாசினிக்கு வாழ்த்துகள் சொல்லி பேசினேன்.

''என்னோட எல்லா பர்த்டேவுக்குமே நான் பெருசாதான் பிளான் பண்ணுவேன். என் பிறந்தநாள்னு இல்ல... என் நட்பு வட்டம், சொந்த பந்தங்கள்னு யாரோட பிறந்தநாளா இருந்தாலும் அந்த நாளை ஸ்பெஷலா கொண்டாடணும்றதுல உறுதியா இருப்பேன். எங்க அப்பா அம்மாவோட 50-வது, 60-வது திருமண நாளையும் நான் ப்ளான் பண்ணேன். அப்பாவோட 80-வது, 90-வது பிறந்தநாளுக்கும் திட்டமிட்டேன். ஒவ்வொரு கொண்டாட்டத்துக்கும் ஒரு தீம் இருக்கும். ஒரு கலர் கோ ஆர்டினேஷன் இருக்கும்.

சுஹாசினி

இது என்னோட 60-வது பிறந்தநாள். ஆனா, வீட்ல நான் மட்டும்தான் இருந்தேன். கணவர் வெளியூர் படப்பிடிப்பு போயிருந்தார். மகன் நந்தன் லண்டன்ல இருக்கார். அதனால நான் பெருசா எதுவும் பிளான் பண்ணல. கமல், 'என் ஆபிஸ்ல கொண்டாடிடலாம்'னார். டிடிகே ரோட்ல இருக்க ராஜ்கமல் ஆபிஸ் மொட்டை மாடியில சமூக இடைவெளியோட, ஏசி எதுவும் இல்லாமல் பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாடினோம்.

இது என்னோட செலிபிரேஷனா இல்லாமல் குடும்ப செலிபிரேஷனா மாறிடுச்சு. ஏன்னா, மொட்டை மாடி அரங்கின் நுழைவில் இருந்து எங்க குடும்பத்துல எங்க பாட்டி, அப்பா, அம்மா, கமல்னு அத்தனை பேருடைய குழந்தைப் பருவத்து போட்டோஸ் தோரணையா அலங்கரிச்சது. அதனால இது ஹாசன் ஃபேமிலியோட ரீயூனியன் போலவே அமைஞ்சிடுச்சு. கேட்டரிங் பண்ணின பாகீரதி, அங்கே பரிமாறப்பட்ட ஒவ்வொரு டிஷ்ஷுக்கும் நான் நடிச்ச படங்களோட ரெஃபரன்ஸ் செட் பண்ணியிருந்தாங்க.

இன்னொரு விஷயம். எங்களோட சின்ன வயசுல இருந்து நாங்க வீட்ல கேக் வெட்ட மாட்டோம். கேக்குக்கு பதிலா தேங்காய் பர்ஃபி தான். அதில் நம்ம மூவர்ணமும் ஜொலிக்கும். அதனால இப்பவும் கேக் வெட்டல.

மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' ஷூட்ல இருந்தார். அதனால அவர் வரமாட்டார்னுதான் நினைச்சேன். பார்த்தா பியானோவோட வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். பூர்ணிமா, ரேவதி, லிஸி, ஜெயஶ்ரீ எல்லாரும் சேர்ந்து ஒரு பெரியா பாக்ஸ் கிஃப்ட்டா கொடுத்தாங்க. அதைப் பிரிக்கவே அரை மணி நேரம் ஆச்சு. அதுக்குள்ள எல்லோரோட கிஃப்ட்டும் தனித்தனி பாக்ஸா இருந்துச்சு.

80'ஸ் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு 10 நிமிஷம் வீடியோ ரெடி பண்ணியிருந்தாங்க. அதுல ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், பிரபு, மோகன், சுரேஷ், ரமேஷ் அரவிந்த், பானுசந்தர், குஷ்பு, பூர்ணிமா, ரம்யா, ஷோபனா, நதியா, ராதா, அம்பிகா, மேனகா, சுமலதா, ஸ்வப்னா, பூனம் தில்லான்னு அதுல நிறைய பேர் அந்த வீடியோல எனக்கு வாழ்த்துகளையும், என்னோட அவங்களுக்கான மகிழ்ச்சியான நினைவுகளையும் பகிர்ந்துக்கிட்டாங்க.

பெரிய சர்ப்ரைஸ் நிதா அம்பானிகிட்ட இருந்து வந்த ஸ்பெஷல் வீடியோ வாழ்த்து. நடிகர் பிரபு ரொம்ப சூப்பரான பட்டுப்புடவை கிஃப்ட்டா கொடுத்தார். மணிக்கும் அதேப்போல பட்டு வேட்டி, சட்டை கிஃப்ட்டா கொடுத்தார்.

நடிகை ரேவதியோட 8 வயசு மகள் அவங்க கையால வரைஞ்ச ஒரு பெயின்ட்டிங் எனக்கு பரிசா கொடுத்திருந்தா. ரொம்பவே நெகிழ்ந்துட்டேன். கிட்டத்தட்ட எங்களோட 60-ம் கல்யாணம்போலவே இந்த நிகழ்ச்சி நடந்ததுல ரொம்பவே சந்தோஷம்'' என சிலிர்க்கிறார் சுஹானினி.



source https://cinema.vikatan.com/tamil-cinema/suhasini-mani-ratnam-shares-her-60th-birthday-celebration

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக