Ad

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

மும்பை: சைபர் கிரிமினல்கள் அபகரித்த ரூ.15 கோடி; 'வாட்ஸ் அப்' குரூப் மூலம் மீட்டது எப்படி?

இணையதள பயன்பாடு அதிகரித்த பிறகு அதுசார்ந்த குற்றங்கள் அதிகரித்துவிட்டன. இதுபோன்ற இணையதள குற்றங்களில் ஈடுபடுவதற்காகவே சில கும்பல்கள் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த சைபர் குற்ற கும்பல்கள் பொதுமக்களிடம் அபகரிக்கும் பணம் குறித்த விபரம் உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றுவிட்டால் பணம் களவாடப்படுவது நிறுத்தப்பட்டுவிடும். இது போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்வற்காக இரண்டு கான்ஸ்டபிள்கள் இணைந்து வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை ஆரம்பித்து ரூ.15 கோடியை சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து மீட்க உதவி செய்துள்ளனர்.

புஸ்பேந்திரா-ராதாராமன்

சமீபத்தில் மும்பை ஜூகு பகுதியைச் சேர்ந்த வயதான ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து இணையதள கிரிமினல்கள் ரூ.75 ஆயிரத்தை அபகரித்துவிட்டனர். அவர்கள் அப்பணத்திற்கு இ-காமர்ஸ் இணையதளத்தில் பொருட்கள் வாங்கியிருந்தனர். முதியவரின் மகள் உடனே போலீஸில் புகார் செய்தார். போலீஸார் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். குற்றப்பிரிவு போலீஸார் 'ஸ்டாப் பேங்கிங் பிராடு' என்ற வாட்ஸ் அப் குரூப்பில் இத்தகவல்களை பதிவேற்றம் செய்தனர். இதில் இ-காமர்ஸ் இணையதளங்களை சேர்ந்தவர்களும், பேமண்ட் பரிவர்த்தனை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மும்பை போலீஸார் ரூ.75 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட தகவலை பதிவேற்றம் செய்தவுடன் சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் நிறுவன அதிகாரிகள் பண பரிவர்த்தனையை நிறுத்திவிட்டனர். இதுபோன்று கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு போலீஸார் ஆரம்பித்த வாட்ஸ் அப் குரூப் மூலம் பொதுமக்கள் பணம் ரூ.15 கோடி காப்பாற்றப்பட்டுள்ளது. குவாலியரை சேர்ந்த கான்ஸ்டபிள்கள் புஸ்பேந்திர யாதவ் மற்றும் ராதாராமன் ஆகியோர் சேர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 'ஸ்டாப் பேங்கிங் பிராடு' என்ற வாட்ஸ் அப் குரூப்பைத் தொடங்கினர். இதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை போலீஸ் அதிகாரிகளை உறுப்பினர்களாகச் சேர்த்தனர். இரண்டு கான்ஸ்டபிள்களும் பின்னர் இன்ஸ்ட்ராகிராமும் தொடங்கினர். இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சைபர் குற்றங்களில் பண பரிவர்த்தனையை நிறுத்துவதுதான் முக்கியம். இதில் குவாலியர் கான்ஸ்டபிள்கள் தொடங்கியுள்ள வாட்ஸ் அப் குரூப் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.

கடந்த 2019-20ஆம் ஆண்டு மட்டும் 44546 இணையதள குற்றங்கள் நடந்திருப்பதாக தேசிய குற்றப்பதிவேடு தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் வெறும் 27 ஆயிரமாக இருந்தது. இது போன்ற இணையதள குற்றங்களில் ஐந்தில் ஒன்றுக்கு மட்டுமே துப்பு துலக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்தாலும் அவர்களிடமிருந்து பணத்தை மீட்பது மிகவும் சவாலான காரியமாக இருக்கிறது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கான்ஸ்டபிள்கள் தொடங்கிய வாட்ஸ் அப் குரூப்பில் நாடு முழுவதும் இருந்து 256 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 2231 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். குற்றம் நடந்த முதல் நான்கு மணி நேரம் 'கோல்டன் அவர்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் விரைந்து செயல்பட்டால் சைபர் குற்றவாளிகள் அபகரிக்கும் பணத்தை மீட்டுவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாட்ஸ் அப் குரூப் வருவதற்கு முன்பு போலீஸார் பேமண்ட் பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்புவர். இதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இந்த நேரத்தில் பண பரிவர்த்தனை முடிந்துவிடும். இதனை தடுக்கவே வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Also Read: மும்பை: மிரட்டிப் பணம் பறித்த வழக்கு; மாஜி போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்குக்குத் தேடுதல் நோட்டீஸ்

இது குறித்து குரூப் தொடங்கிய இருவரும் கூறுகையில், "2017-ம் ஆண்டு அமன் என்பவர் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் ரூ.40 ஆயிரத்தை இழந்துவிட்டு எங்களிடம் புகார் செய்ய வந்தார். அந்த நேரம் இமெயில் அனுப்ப மின்சாரம் இல்லை. உடனே பேமண்ட் பரிவர்த்தனை நிறுவனத்திற்கு போன் செய்து தகவல் கொடுத்தோம். அவர்கள் விரிவாக மெசேஜ் அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். உடனே அனுப்பி வைத்தோம். இதன் மூலம் ரூ.32 ஆயிரத்தை காப்பாற்றினோம். மெசேஜ் அனுப்புவதன் மூலம் பாதிக்கப்படுபவர்களின் பணத்தைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்துதான் இந்த வாட்ஸ் அப் குரூப்பைத் தொடங்கினோம். ஆரம்பத்தில் 20 பேரை சேர்த்தோம். அதில் 5 பேரைத்தவிர மற்ற அனைவரும் வெளியேறிவிட்டனர். மற்ற இ-காமர்ஸ் தளம் மற்றும் பேமண்ட் பரிவர்த்தனை நிறுவன பிரதிநிதிகளையும் இதில் போராடி சேர்த்ததாக இருவரும் தெரிவித்தனர்



source https://www.vikatan.com/news/crime/whatsapp-group-launched-by-two-constables-to-help-recover-rs-15-crore-seized-by-cyber-criminals

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக