என் கணவர் தமிழக அரசின் ஆரம்ப சுகாதார மையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆதார் கார்டை காட்டி தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்தும் வகையில் குறுந்தகவலோ, வேறு தகவல்களோ வரவில்லை. இந்நிலையில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிசெய்யும் வாக்சின் சர்ட்டிஃபிகேட் எனப்படும் தடுப்பூசிச் சான்றிதழை டௌன்லோடு செய்யும் முறையை விளக்க முடியுமா? அவர் தன் மொபைல் எண்ணை ஏற்கெனவே ஆதாருடன் இணைத்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
- வித்யா மகேந்திரன்(விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.
``அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை என எங்கே கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அது பற்றிய தகவல்கள் கோவின் ஆப்பில் பதிவேற்றப்படும். அது அவர்களுடைய அடையாள அட்டைகளுடன் லிங்க் செய்யப்பட்டிருக்கும்.
இங்கே உங்கள் கணவர் ஆதார் கார்டை காட்டி தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும், அவரது மொபைல் எண்ணை ஆதாருடன் இணைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் கோவின் தளத்துக்குச் சென்று உங்கள் ஆதார் எண் அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, தடுப்பூசிச் சான்றிதழை டௌன்லோடு செய்துகொள்ளலாம். அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்கள் கோவின் ஆப்பில் அதை நிச்சயம் பதிவு செய்திருப்பார்கள்.
Also Read: Covid Questions: 2-ம் டோஸ் காலக்கெடு தாண்டிவிட்டது; மீண்டும் முதல் டோஸிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா?
ஒருவேளை உங்களால் இந்த முறையில் தடுப்பூசிச் சான்றிதழை டௌன்லோடு செய்ய முடியவில்லை என்றால் தடுப்பூசி போட்டுக்கொண்ட இடத்துக்கே நேரில் செல்லலாம். அவர்கள் அங்கே பதிவேட்டில் உங்கள் கணவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்களைக் குறித்து வைத்திருப்பார்கள். அதைவைத்து அவர்களையே கோவின் ஆப்பில் பதிவேற்றச் சொல்லி, சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம். கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எல்லோரும் அவர்களுடைய ஆதார் எண் அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மேற்சொன்ன முறையில் சான்றிதழை டௌன்லோடு செய்துகொள்ளலாம்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/didnt-receive-the-confirmation-sms-of-covid-vaccine-how-can-i-get-vaccine-certificate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக