முகநூல் வழியாக நடக்கும் மோசடி சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒருவரின் முகநூல் கணக்கில் இருந்து புகைப்படங்களை எடுத்து, அதே பெயரில் போலி கணக்கு தொடங்குகின்றனர். இதையடுத்து, அவர்களது நண்பர்கள் பட்டியலில் பணம் கேட்கும் நூதன மோசடி நடந்து வருகிறது.
Also Read: திருப்பூர்: `அவசரமா பதினஞ்சாயிரம் ரூபா வேணும்!’ - கலெக்டர் பெயரிலேயே ஃபேஸ்புக்கில் மோசடி முயற்சி
இந்நிலையில் போலி முகநூல் கணக்கு மூலம் பொள்ளாச்சி ஆண் ஒருவரை பெண் ஏமாற்றியது தொடர்பாக கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு முகநூல் வாயிலாக, Sarah Backy என்ற ஐ.டி-யில் இருந்து ஒரு பெண் பழக்கம் ஆகியுள்ளார். அவர் தான் யூ.கே-வில் வசிப்பதாக செந்திலிடம் கூறியுள்ளார். நாளடைவில் அவர்கள் பழக்கம் வாட்ஸ்அப் வரை நீண்டுள்ளது.
இந்நிலையில், அந்தப் பெண் செந்திலிடம் 20,000 பவுண்டு (pound) மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் பரிசாக தருவதாக கூறியுள்ளார். அந்தப் பரிசுப் பொருளை பெற வேண்டுமென்றால் கலால் வரி தொகையை நீங்கள் கட்ட வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, செந்திலுக்கு கலால் வரித்துறை அதிகாரி என ஒருவர் பேசி பணம் கட்ட கூறியுள்ளார். அதை நம்பி செந்திலும் அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.9,50,00 பணத்தைக் கட்டியுள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி செந்திலுக்கு எந்தப் பரிசுப் பொருளும் கிடைக்கவில்லை. மேலும் அந்தப் பெண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
முக்கியமாக, பெண்ணின் முகநூல் பக்கம் போலியானது என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, சரவணன் கோவை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்ற போலி நபர்களிடம் இருந்து விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/coimbatore-man-cheated-by-unknown-facebook-friend
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக