Ad

திங்கள், 12 ஜூலை, 2021

கரூர்:` மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பர்; மதுவில் விஷம் கலந்து கொன்ற இளைஞர்!'

கரூரில் தனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'போலி மது குடித்து இறப்பு' என்று விசயத்தை அவர் திசைதிருப்ப முயன்றும், போலீஸார் இது திட்டமிட்ட கொலை என்பதை கண்டுபிடித்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி (கொலை செய்த இளைஞர்)

கரூர் மாவட்டம், காந்திகிராமம் வடக்கு பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு தர்மா என்கிற கிருஷ்ணமூர்த்தி, மோகன், சசிக்குமார் ஆகிய மூன்று பேரும் மது அருந்தச் சென்றுள்ளனர். அங்கே மூவரும் அமர்ந்து மது அருந்தியபோது, மது அருந்திய மோகன், சசிகுமார் ஆகியோர் வயிற்று வலியால் துடித்துள்ளனர். இதனால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துப் போய் சிகிச்சையளித்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Also Read: கேரள பெண் பாலியல் புகார்: பழனி போலீஸை சுற்றும் சர்ச்சை! - நடந்தது என்ன?

இதுகுறித்து, பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, "போலி மது குடித்ததால், மோகன் உயிரிழந்தார்" என்ற பரபரப்புக் கிளம்பியது. இந்நிலையில், கரூர் நகர டி.எஸ்.பி தேவராஜ் உத்தரவின்பேரில், மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அப்படி செய்யப்பட்ட பரிசோதனையின் முடிவில் மது பாட்டில்களில் நகைத் தொழிலில் பயன்படுத்தக்கூடிய ஆசிட்டை கலந்திருப்பதைக் கண்டறிந்தனர்.

மோகன்

இதனால், மோகன் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பமாக உயிரிழந்த மோகனின் நண்பரான தர்மா என்கின்ற கிருஷ்ணமூர்த்தி (வயது: 23), மதுவில் ஆசிட் கலந்து மோகனுக்குக் கொடுத்ததை போலீஸார் விசாரணையில் ஒப்புக்கொண்டார். மேலும், தனக்குத் திருமணமாகி குழந்தை பிறந்து 6 மாதங்கள் கடந்த நிலையில் மனைவியிடம் மோகன் தவறாக நடக்க முயன்றதாகவும் சொல்லியிருக்கிறார். மோகனிடம் அதனை பலமுறை எடுத்துக் கூறியும், தொந்தரவு தருவதைத் தொடர்ந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து சமாதானம் பேசுவதற்காகக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று, மதுவில் ஆசிட் கலந்து கொடுத்தாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனடிப்படையில், கொலைக் குற்றவாளியான தர்மா என்கிற கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீஸார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.



source https://www.vikatan.com/news/crime/karur-youth-murdered-his-friend

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக