தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இதன் சமீபத்திய சாட்சியாக தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தெலுங்கில் அனுதீப் என்பவர் இயக்கி, புதுமுகங்கள் நடித்த படம் ‘ஜாதி ரத்னாலு’. 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 60 கோடி ரூபாய் வசூலைக் குவிக்க தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் ஆனார் இயக்குநர் அனுதீப். இவரின் அடுத்த கதையை தயாரிக்க பெரும்கூட்டம் கூட, இறுதியில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா எனும் நிறுவனம் அனுதீப்பை பெரிய சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.
ஶ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் என்பது ஆந்திராவில் மிகப்பெரிய மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களை நடத்திவரும் ஏசியன் குழுமத்தின் ஒரு அங்கம். பிரபல இயக்குநர் சேகர் கமுலா இயக்கி, தனுஷ் நடிக்க இருக்கும் தமிழ் - தெலுங்கு படத்தையும் இந்நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.
அனுதீப்பின் கதையோடு சிவகார்த்திகேயனை அணுக, கதை பிடித்துபோய் சிவகார்த்திகேயனும் ப்ராஜெக்ட்டை டிக் அடித்திருக்கிறார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் தயாராவதால் சிவகார்த்திகேயனின் சம்பளமும் உயர்ந்திருக்கிறது. முதல் முறையாக 25 கோடி சம்பளத்தைத் தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்!
தெலுங்கு - தமிழ் என இரண்டு மொழிகளிலும் படத்தை தயாரிக்கும்போது அதன் மார்க்கெட் பாலிவுட் படங்களுக்கு இணையாக உயர்வதால் தொடர்ந்து தமிழ் ஹீரோக்களோடு இணைந்து பணியாற்ற தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. சம்பளமும் சட்டென பல கோடிகளில் உயர்வதால் நடிகர்களும் பைலிங்குவல் படங்களுக்கு பேராதரவு தருகிறார்கள்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/siva-karthikeyan-signs-tamil-telugu-bilingual-movie-with-jathi-ratnalu-director
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக