Ad

திங்கள், 21 ஜூன், 2021

Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொள்வதால் குழந்தையின்மை பிரச்னை வரும் என்பது உண்மையா?

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தையின்மை பிரச்னை வரும் என்பது உண்மையா?

- திரு (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் முத்துச்செல்லக்குமார்

Also Read: Covid Questions: குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் தம்பதியினர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

``தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஆண்-பெண் இனப்பெருக்கச் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆண்மைக் குறைவுக்கோ, பெண்மைக் குறைவுக்கோ வாய்ப்பில்லை. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை இரண்டு தவணைகளாகப் போட்டுக்கொள்கிறோம். இரண்டாவது தவணை போட்டுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு உடல், கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பாற்றலை நன்கு பெறுகிறது. அந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதங்கள் உருவாகிவிடும். அதேபோல உடல் எதிர்ப்பாற்றல் செல்களும் தூண்டப்பட்டு அவற்றின் எதிர்ப்பாற்றலும் மேம்படும்.

எதிர்ப்பாற்றல் புரதங்கள் (Antibodies) மற்றும் எதிர்ப்பாற்றல் செல்களால் (Immune Cells) ஆண் உறுப்புகளோ, பெண் உறுப்புகளோ, அவற்றின் துணை உறுப்புகளோ பாதிக்கப்படுவதில்லை. அதனால் பயப்படத் தேவையில்லை. ஆண்களுக்கு உறுப்பு எழுச்சிக் குறைபாடோ, குழந்தையின்மை பிரச்னையோ, பெண்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல்களோ ஏற்பட வாய்ப்பில்லை.

Parenting - Representational Image

Also Read: Covid Questions: தடுப்பூசி போட்ட பின்பு எத்தனை நாள்கள் கழித்து தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்?

தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கிறார்கள், குழந்தை பெற்றெடுத்திருக்கிறார்கள், தாய்ப்பால் கொடுக்கிறார்கள். எனவே, தடுப்பூசிக்கு எதிராகப் பரப்பப்படும் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/will-taking-covid-vaccines-cause-infertility-doctor-clarifies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக