Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

தொடரும் `ஓர் இரவு... ஒரே அறை' பிரச்னை... லோகேஷ் செய்தது சரியா? #VallamaiTharayo

லோகேஷ் அதிர்ச்சியுடன் எல்லோரையும் பார்க்கிறான். கெளதமும் அபியும் சங்கடத்துடன் இருக்கிறார்கள். இதைப் பார்த்த பெனிடா, ``ஐயோ... உனக்கு விஷயம் தெரியாது இல்ல, நேத்து நைட் எவனோ ஒருத்தன் ரூம் கதவைத் தட்டிருக்கான். அபி பயந்து போய் கெளதமைக் கூப்பிட்டிருக்காங்க. அவர் துணைக்கு ரூம்லயே ஸ்டே பண்ணிட்டார். நீ ஏதாவது கற்பனை பண்ணிக்காதே. அபி ரொம்ப ஸாரி” என்கிறாள்.

லோகேஷும் பெனிடாவும் காரிலிருந்து இறங்கிக்கொள்ள, கெளதம் அபியிடம் ஸாரி கேட்கிறான். ``உங்களுக்கு கால் டாக்ஸி புக் பண்ணிருக்கேன். இந்தச் சூழலில் அதுல போறதுதான் நல்லது” என்கிறான்

Vallamai Tharayo

``நான் இந்த விஷயத்தை சித்தார்த் கிட்ட சொல்லிடறேன். அவர் புரிஞ்சுப்பார். ஏற்கெனவே உங்களைத் தெரியும்கிறதைச் சொல்லாததுதான் பிரச்சினையாச்சு” என்று அபி சொல்ல, கெளதம் உறுதியாக 'வேண்டாம்' என்கிறான்.

லோகேஷ் பெனிடாவிடம், இருவரும் ஓர் அறையில் இருக்கும்போது எதுவும் நடக்காமல் இருந்திருக்குமா என்று கேட்கிறான். பெனிடா, நீ இவ்வளவு மோசமானவனா என்று திட்டுகிறாள். இந்தியச் சமூகம் இப்படித்தான் எல்லாவற்றையும் முன்முடிவுகளுடன் நினைக்கிறது; கதை பரப்புகிறது. இது மாறுவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படுமோ?

சித்தார்த், `ஏன் ஆபிஸ் காரில் வரவில்லை' என்று கேட்க, `சீக்கிரம் வருவதற்காக கால் டாக்ஸி பிடித்து வந்ததாக'ச் சொல்கிறாள் அபி. `அவ்வளவு சீக்கிரம் வந்து என்ன செய்யப் போற' என்கிறான் சித்தார்த்.

அப்போது செகரட்டரி மனைவி அங்கு வந்து, ``சித்தார்த் என்னமா குழந்தைகளைப் பார்த்துக்கறார்! ஆபிஸ் வேலைன்னு ஜாலியா நீ போயிட்டே... பாவம் அவர். அவராவது பொறுப்பா இருக்காரே! ஆமா, ஏன் கால் டாக்ஸி பிடிச்சு வர்றே? தாடி வச்ச ஒருத்தன் டிராப் பண்ணுவானே, அவன் வரலையா?” என்று கேட்கிறார்.

Vallamai Tharayo

அபியை உள்ளே போகச் சொல்லிவிட்டு, “இன்னொரு வாட்ச்மேன் போடணும்னீங்களே, வேண்டாம். கேமரா செட் பண்ணணும்னீங்களே அதுவும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் செல்கிறான் சித்தார்த்.

எதுவும் நடக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் அந்த அம்மா அப்படியே நிற்கிறார்.

இப்போதெல்லாம் சித்தார்த் தன் கோபத்தைக் குறைத்துக்கொண்டதாகத் தோன்றுகிறது. ஒருவேளை தான் வேலை இல்லாமல் இருப்பதால் வந்த பொறுமையா என்று தெரியவில்லை. இல்லை, பின்னர் இதை வைத்துப் பிரச்னை செய்வானா என்றும் தெரியவில்லை. எது எப்படியோ... அந்த அம்மா சொல்வதை வைத்துப் பிரச்னை செய்வான் என்று எதிர்பார்த்த நம்மை இன்று சித்தார்த் ஏமாற்றிவிட்டான்.

திடீரென்று அபி வீட்டில் பெனிடா இருக்கும் சீன். ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் தெரிகிறது அது விளம்பரதாரர் பகுதி என்பது. அபியும் பெனிடாவும் கோதுமை மாவில் என்னவெல்லாம் செய்யலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.

இனி என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-daily-digital-series-review-for-episode-54

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக