Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

வேகமெடுக்கும் கொரோனா பரவல்! - மீண்டும் லாக்டௌனை நோக்கித் திரும்பும் சீனா

சீனாவின் பெய்ஜிங்கை அடுத்த ஹூபே மாகாணத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு கடுமையான விதிமுறைகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத மிகவும் கண்டிப்பான கட்டுப்பாடுகளை இந்த வாரம் சீன அரசு ஹூபேயில் நடைமுறைப்படுத்தியிருக்கிறது. கொரோனா தொற்றுடனான போராட்டத்தால் சீன பொருளாதார வளர்ச்சி 6.8% -ஆகக் குறைந்தது. பெய்ஜிங்கிலிருந்து மூன்றரை மணி நேரம் பயண தூரத்தில் இருக்கும் ஹூபேயின் தலைநகரமான ஷிஜியாஜூவாங்கில் (Shijiazhuang) மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவும், வாகனங்களில் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் அறிவித்தனர். அதேநேரம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக அதிகாரபூர்வமாக எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

சீனா

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஹூபே மாகாணம் 3.6% அளவுக்கு பங்களித்தது. தற்போதைய சூழலால் அப்பகுதியில் பொருளாதார செயல்பாடுகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஷிஜியாஜூவாங்கில் 31பேருக்கு புதிய வகை உருமாறிய கொரோனாத் தொற்றும், 35 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா:`சீனா முதலில் எச்சரிக்கவில்லை; நாங்கள்தான் அறிவித்தோம்!’ - WHO

முன்பே இந்த மாநகரத்தில் பயணிகள் ரெயில் நிலையத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. நெடுந்தூரப் பேருந்து பயண சேவைகளும் நிறுத்தப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் அதிகாரிகள் அம்மாகாணத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தைத் தடை செய்தனர். கடந்த 2019-ல் கொரோனா வைரஸ் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட வுகான் மாகாணத்தில் இருந்து வடக்கில் 10 மணிநேரம் பயண தூரத்தில் உள்ள ஷிஜியாஜூவாங்கில் 11 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். 2020 ஜனவரியில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமானபோது, வுகானில் இருந்து சீனாவின் மற்ற பகுதிகளுகளுடனான போக்குவரத்தை இரண்டு மாதங்களுக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆனாலும், அந்த ஊரடங்கு உலக கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்தவில்லை. இதுவரை உலக அளவில் 88 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.89 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஹூபே மாகாணத்தில் கடந்த வாரம் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் சிலருக்குத் தொற்று பரவியதாக அறிவித்தது. பெய்ஜிங்கைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் நடத்திய பரிசோதனையில் புதிதாகப் பலருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் துணைத் தலைவர் ஃபெங் ஜியான் (Feng Zijian), ``ஹூபேயில் தற்போதுள்ள கொரோனா பரவலின் தீவிரம், அங்கு கொரோனா வைரஸின் தாக்கம் சமீபகாலமாகவே இருந்து வருவதை உணர்த்துகிறது" என்று தெரிவித்தார்.

சீனா

சீன நோய் கட்டுப்பாட்டு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஹூபேயில் கண்டறியப்பட்டுள வைரஸின் மரபணு வரிசைமுறை சீனாவின் மற்ற பகுதி மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸிடமிருந்து வேறுபட்டதாகவும், ரஷ்யாவில் கண்டறியப்பட்டதுடன் சற்று ஒத்துப்போவதாகவும் கூறுகின்றனர். ஹூபே மாகாண சுகாதார ஆணையம் 1,000 மருத்துவப் பணியாளர்களை ஷிஜியாஜூவாங்குக்கு அனுப்பியுள்ளது. கூடுதலாக 2,000 மருத்துவ ஊழியர்கள் அனுப்பப்பட உள்ளனர். சீன புத்தாண்டை ஒட்டி சொந்த ஊர் திரும்ப முடிவு செய்திருக்கும் மக்களுக்கும் அரசு சார்பில் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே பள்ளிகள் விடுமுறை ஒரு வாரம் முன்னதாக விடப்பட்டது.



source https://www.vikatan.com/government-and-politics/international/china-imposed-lock-down-in-hubei-over-covid-cases-rise

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக