Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

`பச்சை துண்டு போட்டுக் கொண்டு பச்சை துரோகம் செய்கிறார் முதல்வர்!’ - கனிமொழி எம்.பி., காட்டம்

’விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற வாசகத்தோடு தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். காரைக்குடி, திருப்பத்தூர், எஸ்.புதூர், சிங்கம்புணரி என பல இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். வழிநெடுகே அண்ணா சிலை , பெரியார் சிலை, தமிழ்தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காலை ஆரம்பித்த அவரது பயணம் தொடர்ந்து இரவு 10 வரை நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் அவர் பேசியதாவது, ``கிராம சாலைகளை விடுத்து, எட்டுவழிச்சாலை, பத்து வழிச்சாலை போடுகின்றனர். அதில்தான் அவர்களுக்கு வருமானம் வருகிறது. அதே போல் தேவையில்லாத பகுதியில் பாலம் அமைக்கின்றனர். சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வசதி கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்படவில்லை. மானியம் கிடையாது.

மாற்றுத்திறானிகளுடன் கனிமொழி

தி.மு.க., ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக்குழு இன்று செயல்படவே இல்லை. 100 நாள் வேலை திட்டத்தில் கூட ஊழல் நடக்கிறது. ஸ்டாலின் முதல்வரானால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். நான் விவசாயி எனக்கூறும் எடப்பாடி பச்சை துண்டை கட்டிக் கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறார்.

மக்களை சந்திக்காத முதலமைச்சர் தற்போது தேர்தலுக்காக மக்களை சந்தித்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து மக்களை சந்திக்ககூடியவர்கள் திராவிடக் கட்சியினர்தான். தொடர்ந்து மக்களை சந்திப்பதற்கான ஒரு முயற்சிதான் கிராமசபை கூட்டம். பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் தி.மு.கவின் நிலைப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடும். சசிகலா பூரணமாக நலமடைந்து திரும்ப வேண்டும்.

விடியலை நோக்கி

தமிழ்நாட்டில் 23 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாட்டில் முதலீடுகள் கொண்டுவரப்பட்டு அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். தி.மு.க ஆட்சியில் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யமாட்டோம். வேளான் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம். இன்னும் 3 மாதத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

சிங்கம்புணரி பகுதியில் உள்ள பறம்புமலை பாதுகாக்கப்படும். தி.முக ஆட்சியில் தான் மாற்று திறனாளிகளுக்கு என தனிதுறை அமைக்க பட்டது. நல வாரியம் துவங்கபட்டதும் கலைஞர் ஆட்சியில் தான். தி.மு.க ஆட்சிக்கு பிறகு மாற்று திறனாளிகள் எத்தனை போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை.

மேடையில் பெரியகருப்பன்

தி.மு.க ஆட்சி வந்ததும் மாற்று திறனாளிகளின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்ற படும் மாற்று திறனாளிகளுக்கு உரிய சலுகைகளை மத்திய அரசு புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும். கோவில்களுக்குள் செயற்கை கால் பொருத்தியவர்ள், செல்ல சாய்வு தளம் அமைக்க வேண்டும்“ என்றும் கோரிக்கை விடுத்தார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/kanimozhi-mp-speech-in-sivaganga

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக