Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

அபி கேட்ட அந்த கேள்வி... என்ன சொல்வான் கௌதம்? #VallamaiTharayo

அலுவலகத்தில் வேலையை முடித்த பிறகுதான் லஞ்ச் என்று சொல்லிவிட்டதால் எல்லோரும் சீரியஸாக வேலையில் இருக்கிறார்கள். பென்னிக்குப் பசி வந்துவிட்டது. சாப்பிடப் போகலாம் என்றால் காயத்ரி என்ன சொல்வாளோ என்கிற பயம். அபி மூலம் பர்மிஷன் வாங்கச் சொல்கிறான் லோகேஷ். அபியை அழைத்துச் சென்று, பர்மிஷன் கேட்கிறாள் பென்னி. வேலை அவசரம் என்று சொல்லும் காயத்ரியிடம், “நீங்களும் களைப்பா இருக்கீங்க. சாப்பிட்டா புது ஐடியா கிடைக்கும். வேலையும் வேகமா முடியும்” என்று அபி சொல்லவும் எல்லோரும் சாப்பிடச் செல்கிறார்கள்.

Vallamai Tharayo

கேன்டீனில் உணவு தயாராகவில்லை என்று பிரட், ஜாம் வாங்கிக்கொண்டு வருகிறாள் பென்னி. அவளுக்கு அது பிடிக்கவில்லை என்பதால், அபி தன்னுடைய உணவைக் கொடுக்கிறாள். உணவைச் சாப்பிட்ட நண்பர்கள் பிரமாதம் என்று பாராட்டுகிறார்கள். இந்த வேலையை விட்டுவிட்டு, ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பித்துவிடலாம் என்று ஐடியாவும் கொடுக்கிறார்கள்.

பென்னியைப் பார்த்து காயத்ரி, “ஒரு ஆம்பளையே சமைச்சு எடுத்துட்டு வரான். உனக்கு என்ன?” என்று கேட்கிறாள். அவளால் பாராட்டப் பெற்ற லோகேஷ், “சமைக்கிறதில் ஆண் என்ன, பெண் என்ன? எல்லோருக்கும் பசிக்குது. பசிச்சா சமைக்க வேண்டியதுதான்” என்று சரியாகச் சொல்கிறான்.

Vallamai Tharayo

கெளதம் வருகிறான். அபியையும் கெளதமையும் சாப்பிடச் சொல்லிவிட்டு மற்றவர்கள் கிளம்புகிறார்கள். `புராஜெக்ட் புரொபோசல் நன்றாக இருந்தது' என்று கெளதம் பாராட்ட, `டீம் மேட்ஸ் ஒத்துழைப்பால் செய்ய முடிந்தது' என்கிறாள் அபி. குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்கிறான் கெளதம்.

“என்னைப் பத்தி உங்களுக்கு எல்லாமே தெரியும். உங்களைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே. நான் கேட்கலாம்தானே?” என்று அபி கேட்க, கெளதம் தயங்குகிறான்.

என்ன சொல்லப் போகிறான்?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-34

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக