இந்திய காப்பீடு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ அண்மையில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் விதிமுறைகளை மாற்றி அமைத்தது. குறிப்பாக, விதிவிலக்குகள் (exclusions) என்பது அனைத்து நிறுவனங்களின் பாலிசிகளிலும் ஒரேபோல்தான் இருக்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ.ஐ தெரிவித்திருந்தது.
ஹெல்த் பாலிசி பிரீமியம் உயர்வு?
இந்த மாற்றம் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் பாலிசிகள் மற்றும் புதிய பாலிசிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்த மாற்றத்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பிரீமியம் கண்டபடி அதிகரித்திருக்கிறது; அதிகரிக்கும் என்கிற தகவல் பரவலாக உருவாகி இருக்கிறது.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
5 திட்டங்களில் மட்டும்..!
அதில்,``ஐ.ஆர்.டி.ஏ.ஐ எடுத்த சமீபத்திய ஒழுங்குமுறை முயற்சிகளால் ஆரோக்கிய காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியம் அதிகரித்திருப்பதாக சில செய்திகள் வந்திருக்கின்றன. இது சம்பந்தமாக, விளக்கம் அளிக்க வேண்டி உள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள், அடிப்படை பிரீமியத்தில் 5 சதவிகிதம் வரை அதிகரிக்கவோ, 5 சதவிகிதம் வரை குறைக்கவோ மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். விலக்குகளை தரநிலைப்படுத்தலுக்காக (standardization of exclusions) தற்போதுள்ள திட்டங்களின் பிரீமியத்தை 5% வரை அதிகரிக்கவோ, 5% வரை குறைக்கவோ மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 30, 2020 நிலவரப்படி, மொத்தமுள்ள 388 ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில், பொது மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் 55 திட்டங்களில் 5% வரை மட்டுமே பிரீமியம் அதிகரிக்கப்பட்டிருகிறது. அதிக க்ளெய்ம் காரணமாக 5 திட்டங்களில் மட்டும் 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக பிரீமியம் அதிகரிக்கப்பட்டுள்ளது” என ஐ.ஆர்.டி.ஏ.ஐ விளக்கம் அளித்துள்ளது.
இதனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை எனலாம்.
source https://www.vikatan.com/business/finance/will-the-changes-made-in-health-insurance-premium-rules-impact-policyholders
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக