Ad

சனி, 4 செப்டம்பர், 2021

Covid Questions: டைபாய்டு நோயிலிருந்து குணமாகியுள்ளேன்; நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

எனக்கு கடந்த மாதம் டைபாய்டு காய்ச்சல் வந்தது. அதற்காக 20 நாள்கள் சிகிச்சையில் இருந்து இப்போதுதான் மீண்டேன். இந்நிலையில் நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? எத்தனை நாள்கள் கழித்துப் போட்டுக் கொள்ளலாம்?

- ரூபன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

``டைபாய்டு காய்ச்சல் என்பது சால்மோனெல்லா டைபி (Salmonella typhi) எனப்படும் பாக்டீரியா கிருமியால் வரக்கூடியது. 20- 30 வருடங்களுக்கு முன்புவரை டைபாய்டு காய்ச்சல் என்பது மிகப்பெரிய நோய். இன்று அப்படியில்லை. இன்னும் சொல்லப் போனால் டைபாய்டு வராமல் தடுக்கும் தடுப்பூசிகள் இன்று உள்ளன.

நீங்கள் அதைப் போட்டுக்கொண்டிருந்தால் இந்தக் காய்ச்சலே உங்களுக்கு வந்திருக்காது. அதே நேரம் டைபாய்டு வந்து, அதற்கான சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு, முழுமையாக குணமாகிவிட்டீர்கள் என்றால் அதற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் தாராளமாக கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

A doctor prepares to administer Covaxin vaccine

Also Read: Covid Questions: தொற்றிலிருந்து மீண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டேன்; எனக்கு ஆன்டிபாடி டெஸ்ட் தேவையா?

உங்களுக்கு காய்ச்சலோ, உடல்வலி, டைபாய்டின் வேறு பாதிப்புகளோ இல்லை, முழுமையாக குணமாகிவிட்டீர்கள் என்ற நிலையில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/i-recovered-from-typhoid-can-i-take-covid-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக