Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

கோலி இன்னும் ஃபுல் ஃபார்முக்கு வரவில்லை, அஷ்வினுக்கு இடமும் இல்லை... ஆனாலும் மீண்டெழும் இந்தியா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஓவலில் நேற்று நடந்து முடிந்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் இங்கிலாந்து அணி 53-3 என்ற நிலையில் உள்ளது. நேற்றைய நாளில் நடைபெற்ற சில முக்கியமான சம்பவங்கள் இங்கே...

அஷ்வின் எங்கே?

முதல் மூன்று போட்டிகளிலும் அஷ்வின் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். கடந்த போட்டியில் மிக மோசமாக இன்னிங்ஸ் தோல்வி அடைந்திருப்பதால், இந்த போட்டியின் ப்ளேயிங் லெவனில் மாற்றமிருக்கும் அஷ்வின் உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே மாற்றம் இருந்தது. ஆனால், அஷ்வின் இல்லை. இஷாந்த் ஷர்மாவுக்கும், ஷமிக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாகூரையும், உமேஷ் யாதவையும் அணிக்குள் கொண்டு வந்திருந்தனர். தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் பென்ச்சில் உட்கார வைக்குமளவுக்கு அஷ்வின் எதுவும் மோசமான பெர்ஃபார்மென்ஸை கொடுத்ததாக தெரியவில்லை.

அஷ்வின்
சொல்லப்போனால், லாக்டெளனுக்குப் பிறகு ஆஸ்திரேலியா சீரிஸ் தொடங்கி நடைபெற்ற அத்தனை போட்டிகளிலும் சிறப்பாக ஆடியிருக்கும் ஒரே இந்திய வீரர் அஷ்வின் மட்டுமே. இந்த தொடருக்காக கவுன்ட்டி போட்டியில் ஆடி அங்கேயும் தன்னை நிரூபித்து காண்பித்திருந்தார்.

அப்படியிருக்கையில், அவருக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கமால்விட்டது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. டாஸ் முடிந்தவுடனேயே சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தங்களின் கொந்தளிப்பை காட்டத் தொடங்கிவிட்டனர்.

கோலியின் பாசிட்டிவ் அட்டாக்!

கடந்த போட்டியில் கோலி மட்டுமில்லை. ஒட்டுமொத்த இந்திய அணியுமே பேட்டிங்கில் சொதப்பியிருந்தது. அதனால், இந்த போட்டியில் கொஞ்சம் கூடுதல் பொறுமையோடு நின்று நிதானமாக ஆடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பௌலர்களுக்கு கவுன்ட்டர் அட்டாக் கொடுக்கும் யுக்தியையே கையில் எடுத்திருந்தனர். குறிப்பாக, கேப்டன் கடந்த போட்டிகளில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விட்டு அவுட் ஆகியிருந்த போதும் இந்த போட்டியில் துணிச்சலாக அதேமாதிரியான ஷாட்களை ஆடினார். ஆனால், அவரிடம் ஒரு கூடுதல் கவனமும் தேவையான ஜாக்கிரைதை உணர்வும் இருந்தது.

கோலி
ஆண்டர்சன் பந்திலுமே கூட டிரைவெல்லாம் ஆடி நாங்கள் பதுங்கப் போவதில்லை அட்டாக்தான் செய்யப்போகிறோம் என்பதை தெளிவாக உணர்த்தியிருந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழும்போது இன்னொருபக்கம் கோலி க்ளீன் ஹிட்டிங்காக பவுண்டரிகள் அடித்து கொண்டிருந்தது பெரும் நம்பிக்கையை கொடுத்தது. ஒற்றை ஆளாக நின்று இந்திய அணியை தூக்கி நிறுத்தப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர். ஆனால், அரைசதம் அடித்த கொஞ்ச நேரத்திலேயே ராபின்சன் பந்தில் அவுட் ஆகி கோலி வெளியேறினார். எப்போதும் அவே டெலிவரிக்களில் அவுட் ஆகும் கோலி இந்த முறை இன்கம்மிங் டெலிவரியில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

பேட்ஸ்மேன்களின் சொதப்பல்!

இங்கிலாந்து கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க நினைத்ததெல்லாம் நல்ல அணுகுமுறைதான். ஆனால், அதை இந்திய அணி முழுமையாக செயல்படுத்தியிருக்கவில்லை. ரோஹித் 11 ரன்னில் கிறிஸ் வோக்ஸின் எக்ஸ்ட்ரா பவுன்ஸிலும், ராகுல் 17 ரன்னில் ராபின்சனின் அண்டர் பவுன்சிலும் வீழ்ந்தனர். புஜாராவே பவுண்டரியுடன்தான் ரன் கணக்கையே தொடங்கினார். ஆனால், நீண்ட நேரம் நிற்கவில்லை. ஆண்டர்சனின் லேட் ஸ்விங்கிற்கு இரையாகி எட்ஜ் ஆனார். ரஹானே ஏற்கனவே மோசமான ஃபார்மில் இருக்கிறார். இந்த போட்டியில் அப்படியே தனது ஃபார்மை தொடர்ந்திருந்தார். ஓவர்டன் பந்தில் ஸ்விங்கை முழுமையாக கணிக்காமல் பேட்டைவிட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். நம்பர் 5-ல் ரஹானேவை இறக்குவதற்கு பதிலாக ஜடேஜாவை இறக்கி ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுக்க முயன்றிருந்தார் கோலி. ஆனால், அதுவும் எடுபடவில்லை. ஜடேஜா 10 ரன்களில் ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வோக்ஸ் வீசிய பந்தில் அரைகுறையாக பேட்டைவிட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்.

இந்த ஆண்டில் மிக மோசமாக ஆடியிருக்கும் மிடில் ஆர்டரை கொண்ட அணிகளின் பட்டியலில் இந்திய அணிக்கு கடைசிக்கு முந்தைய இடம் கிடைத்திருக்கிறது. சீக்கிரமே, இன்னும் ஒரு படி கீழே இறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அடிப்பொலி ஷர்துல் தாகூர்!

கோலியும் அரைசதம் அடித்துவிட்டு அவுட் ஆகிவிட இந்திய அணி தத்தளிக்கத் தொடங்கியது. எப்படியும் ஒரு 120 ரன்களுக்குள் காலியாகிவிடுவார்கள் என தோன்றிய போதுதான் ஷர்துல் தாகூர் க்ரீஸுக்குள் வந்தார்.

ஷர்துல் தாகூர்
அடுத்த சில நிமிடங்கள் டி20 போட்டியின் டெத் ஓவர்கள் போன்று பரபரப்பாக சென்றது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செய்யத் தவறியதை ஷர்துல் செய்து காண்பித்தார்.

கவுன்ட்டர் அட்டாக் எப்படியிருக்க வேண்டும் என ஒரு மாஸ்டர் க்ளாஸே எடுத்துவிட்டு சென்றிருந்தார். வோக்ஸ் பந்தில் பிசிறே தட்டாமல் ஆடியிருந்த ஸ்ட்ரைட் டிரைவ், ஓவர்டன் பந்தில் அவர் தலைக்கு மேலே அடித்த பிரமாண்ட சிக்சர் என எல்லாமே அட்டகாசம்தான். அவர் சேர்த்த அந்த 57 ரன்கள்தான் இந்திய அணி ஒரு கௌரவமான ஸ்கோராக 191 ரன்களை எட்ட வைத்தது.

பும்ரா

மிரட்டல் பௌலிங்!

இந்திய அணி நேற்று பேட்டிங்கில் சொதப்பியிருந்தாலும் பௌலிங்கில் மிரட்டி விட்டனர். ரொம்ப காலமாக சோபிக்காமலேயே இருந்த இங்கிலாந்தின் டாப் ஆர்டர் கடந்த போட்டியில்தான் உயிர் கொண்டிருந்தது. அதனால், 191 ரன்களெல்லாம் போதவே போதாது என்றே தோன்றியது. ஆனால், பும்ரா ஒரே ஒரு ஓவரில் ஓப்பனர்கள் இருவரையும் வெளியேற்றி வெறித்தனமான சம்பவத்தை செய்து இந்தியாவிற்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துக்கு பர்ன்ஸ் பேட்டை விட இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்ப் தகர்ந்தது. அதே ஓவரில் ஒரு பும்ரா ஒரு ஷார்ட் பிட்ச் பாலை வீச அதை பாயின்ட்டுக்கு மேல் தூக்கியடிக்க முயன்று ஹசிப் ஹமீதும் அவுட் ஆனார். இந்த இரண்டு விக்கெட்டுமே இந்தியாவிற்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. நேற்றைய நாள் முடிவதற்குள் ரூட்டை வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்போடு வீசினர். அதேமாதிரியே நேற்றைய நாள் முடிவதற்கு சில நிமிடங்கள் இருந்த போது ரூட்டை காலி செய்தனர்.

உமேஷ் யாதவ் ஒரு பயங்கரமான இன்ஸ்விங்கரை வீச அது இடைவெளியே கொடுக்காத ரூட்டின் பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் லாவகமாக புகுந்து மிடில் ஸ்டம்பை தகர்த்தது. 21 ரன்களில் ரூட் வெளியேறினார். மிகப்பெரிய விக்கெட் கிடைத்ததால் நேற்றைய நாள் இந்தியாவுக்கு மகிழ்ச்சியாகவே முடிந்திருக்கிறது. மலானை மட்டும் இன்று சீக்கிரம் வீழ்த்திவிட்டால் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடலாம்.



source https://sports.vikatan.com/cricket/with-tremendous-bowling-from-pacers-india-slowly-bouncing-back-at-oval

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக